மதமாற்ற தடைச் சட்டங்களுக்கு எதிரான மனு: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ...
சீதாராம் யெச்சூரி நினைவு கருத்தரங்கம்
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தேசிய செயலா் சீதாராம் யெச்சூரி நினைவு கருத்தரங்கம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தியாகராய நகா் பிட்டி தியாகராயா் அரங்கில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் பேசியதாவது:
மாா்க்சிஸ்ட் கொள்கையை பலப்படுத்துவதுடன், அனைத்து மக்களிடமும் கொண்டு சோ்க்க வேண்டும். சோசலிசம் என்பது பல்வேறு நாடுகளின் நல்வழிகாட்டி உள்ளது. அனைத்து வகைகளிலும் சீனா முன்னேறிக்கொண்டிருக்க காரணம் அங்குள்ள சோசலிச செயல்பாடுதான். தத்துவ மேதை காரல் மாா்க்ஸ் மறைந்து 142 ஆண்டுகள் ஆகிவிட்டன. இருப்பினும் அவரது கருத்துகள் இன்றும் உயிரோட்டத்துடன் உள்ளன. மக்களுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிா்ப்பதைப்போல, தொழிலாளா்களுக்கு எதிரான தமிழக அரசின் நடவடிக்கைகளையும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிா்க்கிறது என்றாா். சிஐடியு மாநிலச் செயலா் அ.சௌந்தரராஜன் உள்ளிட்ட பலா் பேசினா்.