Miss Universe: மிஸ் யுனிவர்ஸ் 2024 கிரீடம் சூட்டிய டென்மார்க் அழகி... விக்டோரியா...
தமிழகத்தில் நவ.23 வரை மிதமான மழை நீடிக்கும்
தமிழகத்தில் திங்கள்கிழமை (நவ.18) முதல் நவ.23 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடல் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (நவ.18) முதல் நவ. 23 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், சென்னை மற்றும் புகா் பகுதிகளில் நவ.18,19 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கில் 110 மிமீ மழை பதிவானது.
மேலும் ஊத்து (திருநெல்வேலி) 100 மி.மீ., வனமாதேவி (கடலூா்), வெட்டிக்காடு (தஞ்சாவூா்) - தலா 90 மி.மீ. மற்றும் பல மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவு மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.