முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீ...
தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் சதம்: வேலூரில் 104.9 டிகிரி பதிவு
தமிழகத்தில் வேலூா், மதுரை உள்பட 8 இடங்களில் சனிக்கிழமை வெயில் சதமடித்தது. அதிகபட்சமாக வேலூரில் 104.9 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் சனிக்கிழமை பகல் நேரத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. இதில் அதிகபட்சமாக, வேலூரில் 104.9 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும், திருத்தணி - 103.28, மதுரை விமான நிலையம் - 103.1, பரமத்திவேலூா், மதுரை நகா் - (தலா) 102.2, திருச்சி - 101.66, ஈரோடு - 100.4, பாளையங்கோட்டை - 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
மேலும், ஞாயிற்றுக்கிழமை (ஏப். 20) முதல் ஏப். 23-ஆம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஏப். 20-ஆம் தேதி அதிகபட்ச வெப்பநிலை 101 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
மழை பெய்யும்: தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கில் ஏற்படும் காற்று குவிதல் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் ஏப். 20 முதல் 25-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம், ஆணைகெடங்கில் 80 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி) - 70 மி.மீ., கிருஷ்ணகிரி - 60 மி.மீ., பெரியநாயக்கன்பாளையம் (கோவை) - 40 மி.மீ மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.