இந்திய மாணவா்களின் அமெரிக்க விசா ரத்து: எஸ்.ஜெய்சங்கா் நடவடிக்கை எடுப்பாரா? காங...
'தமிழக அரசிடமிருந்து ஊதியம் வேண்டாம்'- மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் குழு தலைவர் குரியன் ஜோசப்
மாநில உரிமைகளை மீட்டெடுக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தமிழக அரசிடமிருந்து ஊதியம் பெற மாட்டேன் என்று தெரிவித்திருகிறார்.

சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின், 'மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்தவும், மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும் தேவையான ஆலோசனைகள், பரிந்துரைகளை வழங்க நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் ஒரு உயர்நிலை குழு அமைக்கப்படுகிறது.
இந்த குழுவில் அசோக் வர்தன் ஷெட்டி, பேராசிரியர் நாகநாதன் ஆகியோர் இடம் பெறுவார்கள். இந்த குழு ஜனவரி மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யும்' என அறிவித்தார்.
இந்நிலையில் குழு தலைவராக நியமிக்கப்பட்டது குறித்துப் பேசிய குரியன் ஜோசப், “ஒன்றிய - மாநில அரசுகளின் நிதி சார்ந்த கொள்கைகள், நிர்வகிக்கும் அதிகாரங்கள் குறித்து ஆய்வு செய்வது காலத்தின் கட்டாயம். இதற்கு என்னைத் தேர்வு செய்ததைப் பெருமையாகக் கருதுகிறேன்.

இந்தப் பணிக்காக எந்த ஊதியமும் பெற மாட்டேன் என முதலமைச்சர் ஸ்டாலினிடம் வேண்டுகோளாக முன்வைத்தேன். அவரும் அதை ஏற்றுக்கொண்டார்" என்று தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs