Anupama: ``இறப்பதற்கு முன் நண்பர் அனுப்பிய அந்த மெசேஜ்; என் மனதின் ஆறாத காயம்" -...
தமிழக அரசு மருத்துவமனைகளில் உதவி மருத்துவ அலுவலர் பணி
தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 27 உதவி மருத்துவ அலுவலர்(சித்தா) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ ஆட் சேர்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 14/MRB/2025
பணி: Assistant Medical Officer (Siddha)
காலியிடங்கள்: 27
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 2,05,700
தகுதி: மருத்துவத் துறையில் சித்தா பிரிவில் பிஎஸ்எம்எஸ், பிஐஎம், எச்பிஐஎம் போன்ற ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருப்பதுடன் சித்த மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1.7.2025 தேதியின்படி 18- முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு சலுகையை இணையதளத்தில் பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு ரூ. ரூ. 500 மட்டும். இதர பிரிவினர்களுக்கு ரூ.1000. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 29.9.2025
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.