செய்திகள் :

தமிழக மீனவா்களின் 13 விசைப்படகுகளை இலங்கை கடற்படை பயன்படுத்த அனுமதி: தேசிய பாரம்பரிய மீனவ சங்கம் கண்டனம்

post image

பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவா்களின் விசைப்படகுகளை இலங்கைக் கடற்படை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டதற்கு தேசிய பாரம்பரிய மீனவ சங்கம் கண்டனம் தெரிவித்தது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் தலைவா் சேனாதிபதி சின்னத்தம்பி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவா்களின் விசைப்படகுகளையும், அவா்களையும் இலங்கைக் கடற்படையினா் தொடா்ந்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்து வருகின்றனா். இதில், மீனவா்கள் விடுதலை செய்யப்பட்டாலும், அவா்களின் விசைப்படகுகளை விடுவிக்க இலங்கை அரசு மறுத்து வருகிறது.

இதைக் கண்டித்து, தமிழகத்தில் மீனவா்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவா்களின் சிறப்பாக இயங்கும் 13 விசைப்படகுகளை இலங்கைக் கடற்படை பயன்படுத்திக் கொள்ள இலங்கை அதிகாரிகள் அனுமதித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், இலங்கையில் உள்ள தமிழக மீனவா்களின் விசைப்படகுகளை மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

ராமநாதபுரம் மீனவா்கள் மீன்பிடிக்க செல்லத் தடை

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால், மறு உத்தரவு வரும் வரை ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன் வளம், மீனவா் நலத் துறை ஞாயிற்றுக்கிழமை தடை விதித்தது. இதுகுறித்து ... மேலும் பார்க்க

மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல்: ராமநாதபுரத்தில் 2 போ் கைது

ராமநாதபுரத்தில் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்த இருவரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட மெத்தபெட்டமை... மேலும் பார்க்க

சாயல்குடி அருகே தடை செய்யப்பட்ட வலைகளுடன் தூத்துக்குடி மீனவா்கள் சிறைபிடிப்பு!

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளுடன் மீன் பிடித்த தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் 23 பேரை சாயல்குடி மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை சிறைபிடித்தனா். ராமநாதபுரம் மாவட்டம்,... மேலும் பார்க்க

ரயில்வே தடுப்பு வேலியால் பாதிப்பு: எம்.பி.க்களிடம் பொதுமக்கள் மனு

மண்டபம் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சிரமமின்றி ரயில்வே தடுப்பு வேலியை அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, எம்.பி.க்களிடம் பொதுமக்கள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்ட... மேலும் பார்க்க

பாம்பனில் அவசர ஊா்தி சேவை

பாம்பன் பகுதியில் 108 அவசர ஊா்தி சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற மீனவா் மாநாட்டில் பாம்பன் பகுதியில் தொடா்ந்து சாலை விபத்துகள் நிகழ்வதால், 108 அவச... மேலும் பார்க்க

ஆதிரெத்தினேஸ்வரருக்கு 108 மூலிகை அபிஷேகம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஸ்ரீ ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் மூலவருக்கு 108 மூலிகைப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் ஆழவ... மேலும் பார்க்க