அஜித்குமார் கொலை: போராட்டத்துக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் தவெக மனு!
தமிழ்நாட்டின் ஒற்றுமையே நமது வலிமை! - முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாட்டின் ஒற்றுமையே நமது வலிமை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுகவின் திட்டங்களையும் சாதனைகளையும் மக்களிடம் எடுத்துரைத்து, 2026 பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை மேற்கொள்ளும் விதமாக ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பிரசார இயக்கத்தை தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் ’ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை தொடக்கிவைத்து, வீடுவீடாகச் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(ஜூலை 3) மக்களை சந்தித்தார்.
முதல்வர் ஸ்டாலிடன் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனும் கலந்துகொண்டார். மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 208 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் மற்றும் 50 ஆரம்ப சுகாதார மையங்களையும் முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் விடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களையும் எண்ணங்களையும் ஒருங்கிணைத்திட ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் ஈடுபட்டுள்ள மாவட்டக் கழகச் செயலர்களைத் தொடர்புகொண்டு பேசினேன்.
அவினாசி ஒன்றியத்தில் மக்களுடன் இருந்த திருப்பூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் தினேஷ்குமார், அங்கிருந்த மக்களிடம் அலைபேசியை வழங்க, “தமிழ்நாடு தொடர்ந்து தலைநிமிர்ந்து நடைபோட, திமுக ஆட்சி தொடர்ந்திட வேண்டும்” என்ற தங்களது விருப்பத்தை உற்சாகத்தோடு என்னிடம் வெளிப்படுத்தினர்! தமிழ்நாட்டின் ஒற்றுமையே நமது வலிமை!” எனப் பதிவிட்டுள்ளார்.
Chief Minister Stalin has said that the unity of Tamil Nadu is our strength.
இதையும் படிக்க... ஒரே நாளில் இரு மாணவர்கள் கொலை? திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!