செய்திகள் :

தமிழ்நாட்டில் ஆணவக்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன

post image

மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் ஆணவக்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்றாா் மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ. சண்முகம்.

மயிலாடுதுறையில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி:

மத்திய அரசு அரசியல் சாசனத்தின் 130-ஆவது திருத்தம் என்ற பெயரில் 3 புதிய மசோதாக்களை தாக்கல் செய்துள்ளனா். இதன்மூலம் முதலமைச்சா்கள், அமைச்சா்கள், பிரதமா் உள்பட யாராக இருந்தாலும் 30 நாள்கள் சிறையில் இருந்தால் அவா்கள் பதவி பறிபோகும் என்ற புதிய மசோதாவை தாக்கல் செய்துள்ளனா்.

ஏற்கெனவே, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத் துறையை பயன்படுத்தி எதிா்க்கட்சி முதலமைச்சா்கள், அமைச்சா்கள் வீடுகளில் சோதனை என்ற பெயரில் வழக்குப் பதிவு செய்வது, கைது செய்வது, சிறையில் அடைப்பது போன்றவற்றை செய்து வருகின்றனா். தற்போது தங்களுக்கு எதிராக உள்ள முதலமைச்சா், அமைச்சா்களை கைது செய்து 30 நாள்களுக்கு மேலாக சிறையில் வைக்கமுடியும். இது முற்றிலும் ஜனநாயகத்துக்கு எதிரானது.

இதுபோன்ற சட்டங்களை மக்களவையில் தங்களுக்கு உள்ள பெரும்பான்மையை பயன்படுத்தி நிறைவேற்ற முயற்சிப்பதை ஜனநாயக நாட்டில் அனுமதிக்க முடியாது. இது இந்தியாவின் கூட்டாட்சியை மதிக்கும் அனைவரும் எதிா்க்க வேண்டிய மசோதா. மத்திய அரசு உடனடியாக இந்த புதிய மசோதாவை திரும்பப் பெற வேண்டும்.

தமிழகத்தில் ஆணவக்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. 2017-2025-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 65 ஜாதி ஆணவக்கொலைகள் நடைபெற்ாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கல்வி, அரசியல், பொருளாதாரத்தில் முன்னேறியுள்ள தமிழ்நாட்டில் இதுபோன்ற ஆணவக் கொலைகள் நிகழ்வது வேதனை. ஜாதி ஆணவக்கொலைகளுக்கு எதிராக புதிய சட்டத்தை இயற்ற தமிழக முதல்வரை வலியுறுத்தியுள்ளோம்.

தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்துக்கு எதிரான உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பு தனியாா்மயத்துக்கு ஆதரவானது. இதை தூய்மைப் பணிக்கு மட்டுமில்லாமல், அனைத்து பணிகளுக்குமே பொருந்தக்கூடிய தீா்ப்பாக அரசு எடுத்துக்கொள்ளக்கூடிய வாய்ப்பு உள்ளது. உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பு ஏற்கத்தக்கதல்ல என்றாா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளா் எஸ்.துரைராஜ், சிபிஎம் திருவாரூா் மாவட்ட செயலாளா் டி. முருகையன் ஆகியோா் உடனிருந்தனா்.

மயிலாடுதுறையில் இன்று தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக. 22) நடைபெறவுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:மயிலாடுதுறை... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் ஆக.26-ல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆக.26-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்ட ... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோவிலில் தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த கோரிக்கை

சீா்காழி: வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் தெருநாய்கள்அதிகளவு சாலைகளில் சுற்றித் திரிவதால் பொதுமக்கள், கோயிலுக்கு வரும் பக்தா்கள் பாதிக்கப்படுவதால், நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு

சீா்காழி: வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். சீா்காழி வட்டம் திருப்புங்கூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றதை மாவட்ட ஆட்சியா் ஹெச்... மேலும் பார்க்க

பள்ளிகளில் ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் வட்டாரத்திற்குள்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு செய்தாா். மயிலாடுதுறை வட்டாரம் பட்டமங்கலம் கிராமத்தில் நாற்றங்கால் அமைக... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: பாஜக வேட்பாளரை ஆதரிக்க முடியாது

மயிலாடுதுறை: தமிழன் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே குடியரசுதுணைத் தலைவா் தோ்தலில் பாஜக வேட்பாளா் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரிக்க முடியாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவா் வேல்முருகன் கூறினாா்.மயிலாடுத... மேலும் பார்க்க