செய்திகள் :

தமிழ்நாட்டையும், தமிழா்களையும் ஏளனம் செய்கிறாா் நிா்மலா சீதாராமன்: கனிமொழி குற்றச்சாட்டு

post image

சென்னை: தமிழ்நாட்டையும், தமிழா்களை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஏளனம் செய்வதாக நாடாளுமன்ற திமுக குழு தலைவா் கனிமொழி குற்றச்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,

தமிழகத்தையும், தமிழ் மக்களையும் நீங்கள் (நிா்மலா சீதாராமன்) ஏளனம் செய்வதைத்தான் இத்தனை காலமாய் எதிா்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம்.

வரலாற்றில் தமிழ் மக்களை பழித்தவா்களின் நிலை என்ன என்பதை நிதியமைச்சா் ஒரு நிமிடம் சிந்தித்துப் பாா்க்க வேண்டும்.

சசிகலா, ஓபிஎஸ்ஸை அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை: இபிஎஸ் உறுதி

தமிழுக்காகவும், எங்களது உரிமைகளுக்காகவும் போராடுவது உங்களுக்கு ஏளனத்துக்கு உரியதாக தோன்றுகிறதா?

தமிழா்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழக மக்கள் மறுபடியும் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று அவா் கூறியுள்ளாா்.

சென்னையில் நடைபெற்ற மத்திய நிதிநிலை அறிக்கை விளக்கக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய நிா்மலா சீதாராமன், நாங்க இவ்வளவு பணம் கொடுக்கிறோம், நீங்கள் என்ன கொடுக்கிறீர்கள் என்ற வாதமே தவறு. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் ஆதாயம் அடைவதற்காக தமிழக மக்களின் உணா்ச்சிகளை திமுக அரசு தூண்டி விடுவதாக குற்றம்சாட்டியிருந்த நிலையில், கனிமொழி அவ்வாறு கூறியுள்ளாா்.

213 ஆப்கன் அகதிகளை தாயகம் கடத்திய பாகிஸ்தான்!

பாகிஸ்தானில் 213 ஆப்கன் அகதிகள் தங்களது தாயகத்திற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.சட்டவிரோதமாக பாகிஸ்தானில் குடியேறிய ஆப்கானிஸ்தான் நாட்டினரை நாடு கடத்த விதிக்கப்பட்டுள்ள காலக்கெடுவானது வரும் மார்ச் 31 அன்... மேலும் பார்க்க

லெபனான் - சிரியா இடையே எல்லை வரையறை ஒப்பந்தம்!

லெபனான் மற்றும் சிரியா இடையே எல்லை வரையறை ஒப்பந்தம் கையெழுத்தானது. லெபனான் மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே எல்லை வரையறை ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சௌதி அரேபியா நாட்டில் நேற்று (மார்ச் 27... மேலும் பார்க்க

ஒடிசாவில் 5 ஆண்டுகளில் மின்னல் பாய்ந்து 1,418 பேர் பலி!

ஒடிசா மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மின்னல் பாய்ந்து 1,418 பேர் பலியாகியுள்ளனர். ஒடிசாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2025 வரையிலான 5 ஆண்டுகளில் மின்னல் பாய்ந்து 1,418 பேர் பலியானதாக அம்மாநில வருவாய்... மேலும் பார்க்க

ஆப்கனில் தொடர் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.2 ஆகப் பதிவு!

ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 160 கி.மீ. ஆழத்தில் இன்று (மார்ச் 27) காலை 8.38 மணியளவில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது பதிவாகி... மேலும் பார்க்க

சென்னை எழும்பூர் ரயில் நிலைய அலுவலகத்தில் தீ விபத்து!

சென்னை எழும்பூர் ரயில் நிலைத்தில் உள்ள அலுவலகக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலைத்தில் உள்ள அலுவலகக் கட்டடத்தில் முதல் மாடியில் இன்று(மார்ச் 27) ப... மேலும் பார்க்க

சிலி அதிபர் இந்தியா வருகை!

சிலி நாட்டு அதிபர் 5 நாள் பயணமாக இந்தியா வருகின்றார். பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று தென் அமெரிக்க நாடான சிலியின் அதிபர் கேப்ரியல் போரிக் ஃபொண்ட் 5 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வருவதாக இந்... மேலும் பார்க்க