உ.பி.யில் காகித ஆலையில் பாய்லர் வெடித்து 3 பேர் பலி
உத்தரப் பிரதேசத்தில் காகித ஆலையில் பாய்லர் வெடித்த சம்பவத்தில் 3 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், போஜ்பூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள காகித ஆலையில் வெள்ளிக்கிழமை பாய்லர் வெடித்தது. இந்த சம்பவத்தில் 3 தொழிலாளர்கள் பலியானார்கள்.
பலியானவர்கள் யோகேந்திரா, அனுஜ் மற்றும் அவ்தேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொழிலாளர்கள் ஆலையில் பணியில் இருந்தபோது காலை 6 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
திடீரென்று பாய்லர் வெடித்ததால் மூன்று தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டு 50 அடி தூரத்தில் விழுந்தனர் என்று காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
துணை காவல் ஆணையர் சுரேந்திர நாத் திவாரி, தொழிற்சாலை உரிமையாளர் அவ்னீஷ் மோடிநகரில் வசிக்கிறார். ஆலை லேமினேஷன் பேப்பர் தயாரிக்கிறது என்று கூறினார்.
பலியான கூலித் தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று திவாரி மேலும் தெரிவித்தார்.