முன்னாள் அமைச்சரின் மகள் வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!
RJ Balaji: `ரொம்ப கஷ்டமா இருக்கு..'- IPL கமென்ட்டரியில் இல்லாதது குறித்து மனம் திறந்த ஆர்.ஜே பாலாஜி!
IPL திருவிழா இந்தியா முழுவதும் கலைகட்டி வருகிறது. சர்வதேச கிரிக்கெட்டை தொடர்ந்து கவனிக்காதவர்கள் கூட ஐபிஎல் போட்டிகளை ரசிக்கின்றனர். குறிப்பாக 2018ம் ஆண்டு பிராந்திய மொழிகளில் கிரிக்கெட் வர்ணனை தொடங்கியதிலிருந்து பலரும் கிரிக்கெட் ரசிகர்வட்டத்தில் இணைந்துள்ளனர்.
ஆரம்பத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, இந்தி மொழிகளில் தொடங்கப்பட்டு இப்போது மலையாளம், குஜராத்தி, மராத்தி என பல மொழிகளில் செய்யப்பட்டு வருகிறது.
சமீபத்தில் தோனி, பிராந்திய மொழி வர்ணனை கிரிக்கெட்டை ரசிகர்களுடன் ஆழமாக இணைப்பதாகப் பேசியிருந்தார்.

அப்படி தமிழ்மொழி வர்ணனை மூலம் கிரிக்கெட் ரசிகர்களின் அன்பைப் பெற்ற வர்ணனையாளர் ஆர்.ஜே.பாலாஜி. ஐபிஎல் 2025 சீசனில் அவர் வர்ணனை செய்யாதது பலருக்கும் ஏமாற்றமாக இருந்தது.
இந்தநிலையில் இதுகுறித்து இன்ஸ்டாகிராம் வீடியோவில் பேசியுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.
RJ Balaji வீடியோ
"வருடத்தில் மார்ச் கடைசி, ஏப்ரல், மே மாதங்கள் தான் எனக்கு மிகவும் பிடித்த நேரம். எனக்கு மிகவும் பிடித்த வேலையான ஐபிஎல் கிரிக்கெட் கமென்ட்டரி செய்வேன். உங்களுக்கும் அது ரொம்ப பிடிக்கும்.
நேற்று படப்பிடிப்பில் இருந்தபோது கூட நிறையபேர் 'அண்ணே நாளைக்கு வந்துடுவீங்கல்ல?' எனக் கேட்டனர். அவர்களுக்கான பதில்தான் இது, இந்த ஆண்டு ஐபிஎல் கமென்ட்டரியில் நான் வரமாட்டேன்.
இது எனக்கும் ரொம்ப கஷ்டமாதான் இருக்கு. நானும் உங்களை மிஸ் பண்ணுவேன்.

ஆனால் ஒரு நேரத்தில் ஒரு வேலையை செமயா செய்யணும்னு நினைப்பேன். அதனால் இப்ப ஒரு வேலை செய்துகிட்டு இருக்கேன், நான் ஒரு படமும் இயக்க வேண்டும். நிறைய பொறுப்பு இருக்குறதால, இந்த வருஷம் ஐபிஎல்லுக்கு சின்ன நிறுத்தம் கொடுத்திருக்கிறேன்.
இதை சொல்வதே எனக்கு கடினமாக இருக்கிறது. இது எனக்கு மிகவும் பிடித்த வேலை, கடந்த 8, 10 வருஷமா நீங்கள் எல்லாரும் எனக்கு கொடுத்த லவ், 'நேத்து ஏன் வரல, நாளைக்கு வருவீங்களா' எனக் கேட்கும்போதும், ஒவ்வொருமுறை அந்த மைக் எடுக்கும்போதும் ஏற்படும் உணர்வு சிறப்பானது.
இது ஒரு சின்ன நிறுத்தம்தான். நானும் உங்களைப்போல ஹூடி பாபா மந்திரம் போட்டு வீட்டில் இருந்து சி.எஸ்.கே-க்கு சப்போர்ட் செய்வேன்.
இந்த ஷுட்டிங் எல்லாம் முடிந்தபிறகு, அடுத்த சீசனில் பார்ப்போம்" எனப் பேசியுள்ளார்.
RJ Balaji இயக்கும் நடிகர் சூர்யாவின் 45வது படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்துவருவது குறிப்பிடத்த
க்கது.