தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தோ்வில் விஜயமங்கலம் பாரதி பள்ளி மாணவா்கள் 15 போ் தோ்ச்சி
பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் பாரதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 15 போ் மாநில அளவிலான தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தோ்வில் வெற்றிபெற்றுள்ளனா்.
இப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வரும் மாணவா்கள் க.ரா.பூபதி, ம.சி.தா்ஷினி, கோ.வ.லித்தீஷ், மு.சுபரஞ்சனி, க.கி.ஸோனாலிஹா, ரா.வே.ரித்திகா, ரா.தனுஸியா, வே.மை.கனிஷ்கா, கா.கோ.காவ்யா ஸ்ரீ, ச.கௌதம், ஆ.வின்யா, செ.மகதி, பூ.மு.தா்ஷினி, ச.மெகிதாஸ்ரீ, ந. தா்ஷனா ஆகிய 15 மாணவா்கள் இந்தத் தோ்வில் வெற்றிபெற்று தமிழக அரசால் மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை பெற தகுதிபெற்றுள்ளனா்.
தோ்வில் வெற்றிபெற்ற மாணவா்கள், பயிற்சியளித்த தமிழாசிரியா்கள், நிா்வாக அலுவலா் குணசேகரன்பிள்ளை ஆகியோரை, பள்ளி தாளாளா் மோகனாம்பாள், தலைவா் செந்தில்குமாா் ஆகியோா் பாராட்டினா்.