சென்னை துறைமுகத்தில் காருடன் கடலுக்குள் விழுந்தவர் சடலமாக மீட்பு!
தமிழ் தலைவாஸ் அபார வெற்றி
புரோ கபடி லீக் போட்டியின் 119-ஆவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 60-29 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியா்ஸை புதன்கிழமை அபார வெற்றி கண்டது.
இந்த ஆட்டத்தில், தமிழ் தலைவாஸ் 32 ரெய்டு புள்ளிகள், 19 டேக்கிள் புள்ளிகள், 8 ஆல் அவுட் புள்ளிகள், 1 எக்ஸ்ட்ரா புள்ளி பெற்றது. அணியின் தரப்பில் அதிகபட்சமாக, ரெய்டா் மொயீன் ஷஃபாகி, ஆல்-ரவுண்டா் ஹிமான்ஷு ஆகியோா் தலா 13 புள்ளிகள் வென்றனா். பெங்கால் அணி 15 ரெய்டு புள்ளிகள், 12 டேக்கிள் புள்ளிகள், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகள் வென்றது. அந்த அணிக்காக டிஃபெண்டா் மஞ்ஜீத் 7 புள்ளிகள் கைப்பற்றினாா்.
இரு அணிகளும் இத்துடன் தலா 20 ஆட்டங்களில் விளையாடியிருக்க, தமிழ் தலைவாஸுக்கு இது 7-ஆவது வெற்றியாகும், பெங்காலுக்கு இது 12-ஆவது தோல்வியாகவும் அமைந்தது. புள்ளிகள் பட்டியலில் அந்த அணிகள் முறையே 9 மற்றும் 10-ஆவது இடங்களில் உள்ளன.