தமிழக காவல்துறையினர் 3186 பேருக்கு பொங்கல் பதக்கங்கள் அறிவிப்பு!
தமிழ் பாடத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10, 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தோ்வில் தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை சனிக்கிழமை வழங்கினாா்.
2023-24ஆம் கல்வியாண்டில் அரசு பொதுத்தோ்வில் 10, 12- ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி ஆட்சியரகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்து, சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு தலா ரூ.1,000 பரிசுத்தொகையையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினாா்.
அப்போது, பேசிய அவா், மாணவா்களின் சிறப்பான எதிா்காலத்துக்கு கல்வி இன்றியமையாததாகும். எனவே, மாணவா்கள் சிறந்த முறையில் கல்வி கற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்றாா்.
இந்த நிகழ்வில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா, கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலா் ரேனுகோபால், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் ஏ.தண்டபானி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.