`மாதம் 1500 ரூபாய்' -4000 பெண்களிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்கும் மகாராஷ்டிரா...
``தமிழ் மொழி, கலாச்சாரத்தின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வரும் பிரதமர் மோடி..'' - ஆளுநர் ரவி
2015-ம் ஆண்டு இலங்கை சென்ற பிரதமர் மோடி, யாழ்ப்பாணத்தில் கலாசார மையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். இந்தியா, இலங்கை நல்லுறவை வலுப்படுத்தும் விதமாக இந்திய நிதியுதவியுடன் 11 மில்லியன் டாலர் மதிப்பில் கலாசார மையம் அமைக்கப்பட்டு வந்தது. இந்தப் பணிகள் முடிந்து, 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கே, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். இந்த நிலையில், அந்தக் கலாசார மையத்துக்கு `திருவள்ளுவர் பண்பாட்டு மையம்' என பெயரிடப்பட்டுள்ளது.
இதை வரவேற்று பிரதமர் மோடி தன் எக்ஸ் பக்கத்தில், ``யாழ்ப்பாணத்தில் இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட கலாச்சார மையத்துக்கு திருவள்ளுவர் பெயர் சூட்டியதை வரவேற்கிறோம். இது திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துவதுடன், இந்தியா மற்றும் இலங்கை மக்களுக்கு இடையே உள்ள ஆழமான கலாச்சார, மொழியியல், வரலாறு மற்றும் நாகரீக பிணைப்புகளுக்கு முக்கியச் சான்றாக விளங்குகிறது" எனப் பதிவிட்டிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி தன் எக்ஸ் பக்கத்தில், ``இந்திய உதவியுடன் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்ட புகழ்பெற்ற கலாச்சார மையத்துக்கு "திருவள்ளுவர் கலாச்சார மையம்" என்று மறுபெயரிடப்பட்டிருப்பது, தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வரும் பிரதமர் மோடியின் தொடர்ச்சியான பணியில் மற்றொரு மைல்கல்லாகும். இது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஆயிரக்கணக்கான ஆண்டு பழமையான கலாச்சார மற்றும் நாகரிக தொடர்பைக் காட்டுகிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.