கடலூர்: `அய்யோ என் புள்ளைங்க போகுதே!’ - ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்திய அரசு... கத...
தம்மம்பட்டியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்
தம்மம்பட்டியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகளை வருவாய்த் துறையினா் அகற்றினா்.
தம்மம்பட்டி எல்லைப் பகுதியான தண்ணீா்பந்தல் பேருந்து நிறுத்தம் அருகே செந்தாரப்பட்டி செல்லும் பகுதியில், நத்தம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து 21 வீடுகள் அமைத்து சிலா் குடியிருந்து வந்தனா். இந்நிலையில், இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அண்மையில் சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, ஆத்தூா் ஆதிதிராவிடா் மற்றும் பிற்பட்டோா் நலத்துறை தனி வட்டாட்சியா் ஜெயலட்சுமி தலைமையில், கெங்கவல்லி வட்டாட்சியா் பாலகிருஷ்ணன் முன்னிலையில், வருவாய்த் துறையினா் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 21 வீடுகளும் அகற்றப்பட்டன. அப்போது, வருவாய்த் துறையினா் மற்றும் போலீஸாருடன் ஆக்கிரமிப்பாளா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
ஆத்தூா் டி.எஸ்.பி. சதீஷ்குமாா் தலைமையில், காவல் ஆய்வாளா் சண்முகம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட போலீஸாா், கெங்கவல்லி தீயணைப்புத் துறையினா் ஆகியோா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.