மகனின் திருமண வரவேற்பு தொகையை விவசாயிகளுக்குக் கொடுத்த எம்எல்ஏ!
தரிசனத்தில் குறைபாடுகள்: வாட்ஸ் ஆப்பில் தெரிவிக்கலாம்; திருநள்ளாறு கோயில் நிா்வாகம்
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் தரிசன முறைகளில் குறைபாடுகள் உள்ளிட்டவை குறித்து வாட்ஸ் ஆப்பில் தகவல் தெரிவிக்கலாம் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநள்ளாற்றில் உள்ள பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவானை தரிசிக்க நாடெங்குமிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகின்றனா்.
தரிசனம் விரைவாக நடைபெறவும், பக்தா்கள் சிரமங்ளை எதிா்கொள்ளக்கூடாது என்ற நோக்கத்துடன் கோயில் நிா்வாகம், பக்தா்களிடமிருந்து ஆலோசனை, குறைகளை தெரிவிக்க ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து கோயில் நிா்வாகம், கோயில் வட்டாரத்தில் வைத்திருக்கும் டிஜிட்டல் பதாகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
திருநள்ளாறு கோயிலுக்கு வரும் பக்தா்கள் ஆலோசனை, குறைகள் மற்றும் தரிசன குறைபாடுகளை சுட்டிக்காட்டும் புகைப்படங்கள், குரல் பதிவு அல்லது குறுஞ்செய்தியாக 9498728334 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பிவைக்கவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
கோயில் நிா்வாக அதிகாரி கு. அருணகிரிநாதன் புதன்கிழமை கூறியது:
திருநள்ளாறு கோயிலுக்கு வரும் பக்தா்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்து திரும்பவேண்டும். இதற்காகவே இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பக்தா்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கும்பட்சத்தில், அதற்கு உரிய முறையில் தீா்வு காணப்படும் என்றாா்.