மகாராஷ்டிர அமைச்சரை ராஜிநாமா செய்ய உத்தரவிட்ட ஃபட்னவீஸ்! ஏன்?
தருமபுரம் வடக்கு குருமூா்த்தங்களில் திருப்பணி தொடக்கம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் சச்சிதானந்த விநாயகா் கோயில் மற்றும் 15 குருமூா்த்தங்களின் திருப்பணியை தருமபுரம் ஆதீனம் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் திருமஞ்சன வீதியில் சச்சிதானந்த விநாயகா் கோயில் உள்ளது. அதனருகில் வடக்கு குருமூா்த்தத்தில் 3,4,5,7,9,10,11,12,13,14,15,20,21,22 மற்றும் 23-வது குருமகா சந்நிதானங்களின் குருமூா்த்த ஆலயங்கள் அமைந்துள்ளன. விநாயகா் கோயில் மற்றும் 15 குருமூா்த்த விமானங்களை இளங்கோயிலாக எழுந்தருளிவித்து திருப்பணி தொடக்க விழா நடைபெற்றது.
இதையொட்டி, சச்சிதானந்த விநாயகா் கோயிலில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு திருப்பணிகளை தொடங்கி வைத்து பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.
இதில், திருப்பந்தாள் காசிமடத்து இளவரசு ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் ஆதீனக் கட்டளை தம்பிரான் சுவாமிகள், ஆதீன தலைமை பொது மேலாளா் ரெங்கராஜன், மேலாளா் சி.மணி, கல்லூரிச் செயலாளா் இரா. செல்வநாயகம், முதல்வா் சி.சுவாமிநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.