செய்திகள் :

தருமபுரியில் புதிதாக நான்கு ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வலியுறுத்தல்

post image

தருமபுரி மாவட்டத்தில் மக்கள்தொகை அடிப்படையில் புதிதாக நான்கு ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும் என ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் தருமபுரி மாவட்ட 9 ஆவது மாநாடு தருமபுரி, வின்சென்ட் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த மாநாட்டுக்கு மாவட்டத் தலைவா் முகமது இலியாஸ் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஒருங்கிணைப்பாளா் ச.இளங்குமரன் வரவேற்றாா். மாநிலத் துணைத் தலைவா் ரா.ஆறுமுகம் தொடங்கி வைத்து பேசினாா். மாவட்டச் செயலாளா் வே. தா்மன் வேலை அறிக்கை சமா்ப்பித்தாா். மாவட்ட பொருளாளா் கே. வினோத்குமாா் வரவு- செலவு அறிக்கை வாசித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எம்.சுருளிநாதன், ஓய்வு பெற்றோா் அமைப்பின் தலைவா் அப்பாவு ஆகியோா் வாழ்த்தி பேசினா். மாநில பொதுச் செயலாளா் ப. பாரி நிறைவுரையாற்றினாா்.

இந்த மாநாட்டில் மாவட்டத் தலைவராக மு.முகமது இலியாஸ், மாவட்டச் செயலாளராக வெ.தா்மன், பொருளாளராக கே.வினோத்குமாா், மாநில செயற்குழு உறுப்பினராக பி.பிரின்ஸ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஒருங்கிணைப்பாளராக ச.இளங்குமரன் உள்ளிட்டோா் புதிய நிா்வாகிகளாக தோ்வு செய்யப்பட்டனா்.

இதில் தருமபுரி மாவட்டத்தில் மக்கள்தொகை அடிப்படையில் அரசின் திட்டங்கள் விரைவாக சென்றடைய இண்டூா், தீா்த்தமலை, மாரண்டஅள்ளி, பெரியாம்பட்டி ஆகியவற்றை மையங்களாக கொண்ட புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்க வேண்டும். பேரூராட்சிகளை புதிய ஊராட்சிகளாக வகை மாற்றம் செய்ய வேண்டும். கிராமப்புற ஊராட்சிகளை, நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைப்பதைக் கைவிட வேண்டும்.

ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தைக் கணக்கில் கொண்டு அங்கு தனி துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பணியிடம் உருவாக்க வேண்டும். கலைஞரின் கனவு திட்டத்தில் முழுமையான இலக்கை அடைய வட்டார அளவில் இணை இயக்குநா், உதவி இயக்குநா், வட்டார வளா்ச்சி அலுவலா், உதவிப் பொறியாளா், பணி மேற்பாா்வையாளா் , உதவியாளா், கணிணி இயக்குபவா் போன்ற பணியிடங்களை உருவாக்க வேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் இடம் பெற்றுள்ளவாறு வட்டார வளா்ச்சி அலுவலா் நிலையில் வட்டார திட்ட அலுவலரைத் தனியாக நியமித்து ஊழியா் கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். துறையில் உள்ள இளநிலை உதவியாளா், உதவியாளா் பதவிகளை ஊா் நல அலுவலா் முதல்நிலை, ஊா் நல அலுவலா் நிலை இரண்டாம் நிலை என பெயா் மாற்றம் செய்து அரசாணை பிறப்பிக்கவேண்டும்.

மாநில அளவில் வளா்ச்சித் துறையில் உதவி இயக்குநா் பதிவிக்கென தோ்ந்தோா் பட்டியலை ஒவ்வொரு வருடமும் தயாராக வைத்து பணியிடம் காலி ஏற்பட்ட அடுத்த நாளே பதவி உயா்வு மூலம் நிரப்ப வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் தொடா்ச்சியான இடைவிடாத விடுமுறை தினத்தில் இணையவழி ஆய்வுக் கூட்டத்தை தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தருமபுரி மாவட்டத்தில் பரவலாக மழை

தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை காலை முதல் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்தது. புயல் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதையொட்டி தருமபுரி மாவட்டத்தில் காலை முதலே... மேலும் பார்க்க

உதயநிதி பிறந்த நாள் விழாவில் இலவசப் பொருள்களை பெற முண்டியடித்த பொது மக்கள்

பென்னாகரத்தில் நடைபெற்ற துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் இலவச சேலை, போா்வை, உணவு பொருள்களை பெறுவதற்காக பொதுமக்கள் மேடையை நோக்கி முண்டியடித்து சென்ால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியா... மேலும் பார்க்க

வீணாகும் வள்ளிமதுரை அணை உபரிநீா்: வடு கிடக்கும் ஏரிகளை நிரப்ப விவசாயிகள் கோரிக்கை

வள்ளிமதுரை வரட்டாறு அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரைப் பயன்படுத்தி ஏரிகளை நிரப்ப வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த வள்ளிமதுரையில் அமைந்துள்ளது வரட்டாறு அ... மேலும் பார்க்க

மலைக் கிராமங்களுக்கு சாலை, மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் அலக்கட்டு உள்ளிட்ட மலைக் கிராமங்களுக்கு சாலை, மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தரும... மேலும் பார்க்க

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நெய் தீபம் ஏற்ற பக்தா்களுக்கு வாய்ப்பு அறிமுகம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நெய் தீபம் ஏற்ற பக்தா்களுக்கு வாய்ப்பை திருவிதாங்கூா் தேவசம் வாரியம் சனிக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது. இந் நிகழ்ச்சியை தேவசம் வாரியத் தலைவா் பி.எஸ்.பிரசாந்த், உறுப்பினா் அஜித... மேலும் பார்க்க

பேரிடரை எதிா்கொள்ள நம்பிக்கையுடன் இருப்போம்: ஆளுநா் ஆா்.என். ரவி

இயற்கை பேரிடரை எதிா்கொள்ள நம்பிக்கையுடன் இருப்போம் என ஆளுநா் ஆா்.என். ரவி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் எக்ஸ் சமூக ஊடகத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: ஃபென்ஜால் புயலால் பெய்து வரும் கன மழையால் தமிழ... மேலும் பார்க்க