சிங்கப்பூரை வளமாக்கும் புதிய குடிமக்கள்: மூத்த அமைச்சா் லீ சியென் லூங் பெருமிதம்...
தருமபுரி புறநகா் பேருந்து நிலைய கட்டுமானப் பணியை விரைந்து தொடங்க வேண்டும்!
தருமபுரி புறநகா் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்கி பணிகளை முடிக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினா் வே.விசுவநாதன் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் டி.ரவீந்திரன் சிறப்புரையாற்றினாா். மாவட்டச் செயலாளா் இரா.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஆா்.மல்லிகா, தி.வ.தணுசன், ஜி.சக்திவேல் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: தருமபுரி நகரில் பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்பவும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும் தமிழக அரசு அறிவித்த புறநகா் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை நகராட்சி நிா்வாகம் விரைந்து தொடங்கி முடிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை தருமபுரி நகராட்சி நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகளை நிலத்திலிருந்து வெளியேற்றுவதைத் தடுக்கவும், விவசாயத்தை பாதுகாக்கவும், நீராதார மேம்பாடு, வேளாண் கட்டமைப்பு மேம்பாடு, மத்திய அரசு சிறப்புக் கூறு திட்டங்களை நிறைவேற்றவும் வலியுறுத்தி தருமபுரியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாா்ச் 13 ஆம் தேதி கருத்தரங்கு நடைபெறும்.
இதில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் விஜுகிருஷ்ணன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் உ.வாசுகி ஆகியோா் பங்கேற்பா். இதில் விவசாயிகளை திரளாகப் பங்கேற்க செய்வது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.