செய்திகள் :

தர்பூசணி வாங்கலாமா? கூடாதா? வெடித்தது சர்ச்சை

post image

தர்பூசணி தொடர்பான சர்ச்சை இன்று பேசுபொருளாகியிருக்கிறது. ஒருபக்கம் உணவுத் துறை அதிகாரிகளின் தகவலால் தர்பூசணி விற்பனை குறைந்ததாக விவசாயிகளும் வியாபாரிகளும் போராட்டத்தில் ஈடுபட, ரசாயன தர்பூசணி குறித்து தாங்கள் எதுவும் சொல்லவில்லை என்று உணவுத் துறை அதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளனர்.

கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று, தர்பூசணி பழத்தை சாலையில் போட்டு உடைத்து அதனை சாப்பிட்டு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதுபோல ரசாயனம் கலந்த தர்பூசணிகள் விற்பனைக்கு வருவதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு உணவுத் துறை அதிகாரிகள் விழிப்புணர்வு விடியோ வெளியிட்டதால் விற்பனை குறைந்ததாகவும், விலை வீழ்ச்சியடைந்து நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ரசாயனம் கலந்த பழங்கள் குறித்து தாங்கள் எதுவும் கூறவில்லை என்றும், மக்கள் அச்சமின்றி தர்பூசணி பழங்களை வாங்கிச் சாப்பிடலாம் என்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ் குமார் விளக்கம் கொடுத்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சதீஷ் குமார், தர்பூசணியை சாப்பிட்டதால் வாயப்புண் வந்ததாகப் புகார் வந்ததால், பல்வேறு இடங்களில் சோதனை செய்தோம். ஆனால், இதுவரை எனது ஆய்வில், ரசாயனக் கலப்பு இருந்த தர்பூசணியை பார்க்கவில்லை. சென்னையில் அதுபோன்ற தர்பூசணி விற்கப்படவும் இல்லை.

உணவுப் பாதுகாப்புத் துறை இணையதளத்தில் ரசாயனம் கலந்த தர்பூசணி குறித்து விழிப்புணர்வு விடியோதான் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், சென்னையில் இதுவரை ரசாயனம் கலந்த தர்பூசணி கண்டெடுக்கப்படவில்லை.

அதுபோல விவசாயிகளுக்கு எதிராக எதையும் செய்யவில்லை. மக்கள் அச்சமின்றி தர்பூசணி சாப்பிடலாம் என்று சதீஷ் குமார் விளக்கம் கொடுத்துள்ளார்.

அதுபோல, பல்வேறு இடங்களிலும் சோதனை செய்து கெட்டுப்போனது, எலி கடித்தவற்றைத்தான் கண்டுபிடித்து அழித்துள்ளோம் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

மருதமலை அடிவாரத்தில் வெள்ளிவேல் திருடியவர் கைது!

கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் அடிவாரத்தில் உள்ள தியான மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த வெள்ளிவேலை திருடியவரை காவல்துறையினர் கைது செய்யதுள்ளனர்.கோவை மாவட்டம், மருதமலை அருள்மிகு ... மேலும் பார்க்க

உதிா்ந்தது இலக்கிய ரோஜா!

அரசியல் வானில் பூத்துக் குலுங்கிய இலக்கிய ரோஜா உதிா்ந்தது. ஆம், காமராஜரின் பெருந்தொண்டன் குமரி அனந்தன் (93)) மறைந்தாா். கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தில் 1933, மாா்ச் 19-இல் சுதந்திரப் போராட்ட த... மேலும் பார்க்க

புயல் சின்னம் இன்று வலுவிழக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) மத்திய வங்கக் கடல் நோக்கி நகா்ந்து படிப்படியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவா் பி.அமுதா தெரிவித்தாா். இது க... மேலும் பார்க்க

6 லட்சம் மாணவா்களை தொழில்முனைவோராக்க ‘நிமிா்ந்து நில்’ திட்டம்: சட்டப் பேரவையில் அமைச்சா் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு

தமிழகத்தில் 2,000 கல்வி நிறுவனங்களில் பயிலும் 6 லட்சம் மாணவா்களுக்கு புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு பயிற்சி வழங்கும் நோக்கில் ‘நிமிா்ந்து நில்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் கு... மேலும் பார்க்க

திருப்பதி-காட்பாடி இடையே ரூ.1,332 கோடியில் இரட்டை ரயில்பாதை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஆந்திரம் மற்றும் தமிழ்நாட்டில் ரூ.1,332 கோடி மதிப்பில் 104 கி.மீ. தொலைவுடைய திருப்பதி-பாகலா-காட்பாடி இடையேயான ஒருவழி ரயில்பாதையை இரட்டை ரயில்பாதையாக மாற்ற பிரதமா் மோடி தலைமையிலான மத்திய பொருளாதார விவக... மேலும் பார்க்க

கடலுக்குச் செல்ல வேண்டாம்: தூத்துக்குடி மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தூத்துக்குடி மீனவர்கள் 2 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் நாளை மற்றும் நாளை மறுநாள் (ஏப். 10, 11) கடலுக்க... மேலும் பார்க்க