செய்திகள் :

தர்மபுரி: அருணாச்சலேஸ்வரருக்கு சீர்வரிசை எடுத்து அசத்திய இஸ்லாமியர்கள்; ஆச்சர்யப்பட்ட நிர்வாகம்!

post image

தர்மபுரி மாவட்டம், பொம்மிடியில் அமைந்துள்ளது சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில். ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை மாத பௌர்ணமி திதி நட்சத்திரத்தில் அருணாச்சலேஸ்வரர்- ஸ்ரீ உமா மகேஸ்வரி அம்பிகா திருக்கல்யாண வைபவ விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று திருக்கல்யாண வைபவ விழா நடைபெற்றது. இதில், யாருமே எதிர்பார்க்காத விதமாக ஒரு நிகழ்வு நடந்தது.

பொம்மிடி பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் மேள தாளத்துடன் அருணாச்சலேஸ்வரருக்கு 281 வகையான சீர் எடுத்து வந்தனர். அதில், பழங்கள், பூக்கள், இனிப்பு வகைகள் என்று இருந்தன.

இதனைக் கண்டு கோயில் நிர்வாகத்தினர் வியப்படைந்து, சீர் எடுத்து வந்தவர்களை வரவேற்று கோயிலில் அமரவைத்தனர்.

இது குறித்துப் பேசும் கோயில் நிர்வாகத்தினர் சிலர், “சாதி, மத, பேதம் என்பது வெறும் வார்த்தைகள் மட்டும் கிடையாது. அதனை அனைவரும் பின்பற்றவும் வேண்டும். அந்த வகையில் வழிபடும் இறைவன் என்பதில் வேறுபாடு இருந்தாலும், கடவுளுக்கு எல்லாரும் சமம் தான். அதனை வெளிப்படுத்தும் விதமாகத்தான் மத வேறுபாடு இல்லாமல், நேற்று நடந்த திருக்கல்யாண விழாவில் இஸ்லாமியர்களும் கலந்துகொண்டது.

இதே போன்று இம்முறை இனிவரும் காலங்களில் பின்பற்றப்படும்.” என்றனர்.

``ஜாபர் சாதிக் போதைப்பொருள் பணத்தை தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் முதலீடு செய்திருக்கிறார்" - அண்ணாமலை

தமிழ்நாடு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, ஜாபர் சாதிக் போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை வெள்ளையாக்க தமிழ்நாடு பாடநூல் கழகத்தைப் பயன்படுத்தியிருப்பதாகக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.இது கு... மேலும் பார்க்க

Modi vs Congress 'நேரு, இந்திரா காந்தியை சாடிய மோடி; காட்டமான காங்கிரஸ்' - அதகளமான நாடாளுமன்றம்

அட்டாக் மோடுபிரதமர் மோடிநாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, "காங்கிரஸின் ஒரு குடும்பம் அரசமைப்பிற்கு தீங்கு விளைவிக்கிறது. 75 ஆண்டுகளில் அந்த ஒரு குடும்பம் மட்டுமே 55 ஆண்டுகள் ஆட்சி செய்தது. அப்போது ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: சரத் பவார், அஜித் பவார் சந்திப்பு... இணைய விரும்பும் பவார் குடும்பம் - சாத்தியமா?!

தேசியவாத காங்கிரஸ்இரண்டாக உடைந்தமகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. அஜித் பவார் பெரும்பாலான எம்.எல்.ஏ-க்களுடன் சென்று தேசியவ... மேலும் பார்க்க

EPS-ஐ மிரட்டும் 5 இடிகள், 'டிச 15' பொதுக்குழுவுக்குப் பின் மீள்வாரா? | Elangovan Explains | Vikatan

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்நாளை 'டிசம்பர் 15' அதிமுக பொதுக்குழு கூட்டம் ஆனால் அதற்கு முன்பாகவே உட்கட்சி பஞ்சாயத்துகள், வழக்குகள் என எடப்பாடியை சுற்றி எக்கச்சக்க இடி. மிரட்டும் சிக்கல்களில் இருந்து மீள, ... மேலும் பார்க்க