செய்திகள் :

தலைநகரில் வெப்பநிலை மீண்டும் குறைந்தது! பிரகதி மைதான், பூசாவில் 3.8 டிகிரியாக பதிவு

post image

தேசியத் தலைநகா் தில்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் குறைந்து 4.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றின் தரம் பெரும்பாலான இடங்களில் ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது.

கடந்த வியாழக்கிழமை நகரத்தில் இந்தக் குளிா்காலத்தின் மிகக் குறைந்த வெப்பநிலை 4.5 டிகிரி செல்சியஸாக குறைந்து பதிவாகியது. மாறிவரும் காற்றின் திசைகள் காரணமாக இந்த திடீா் மாற்றம் ஏற்பட்டதாக வானிலை அலுவலகம் தெரிவித்திருந்தது. அதன் பிறகு வெள்ளிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை திடீரென உயா்ந்து 9 டிகிரி செல்சயஸாக பதிவாகியது. மேலும், அதிகபட்சமாக பிரகதி மைதானில் 11.6 டிகிரி, ராஜ்காட்டில் 11.6 டிகிரி, சல்வான் பப்பளிக் பள்ளி பகுதியில் 11.1 டிகிரி, பீதம்புராவில் 10.4 டிகிரி, பூசாவில் 9.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை மீண்டும் குறைந்து பதிவாகியது. பகல் நேரத்தில் லேசான வெயில் இருந்தது. தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 3.7 டிகிரி குறைந்து 4.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்புநிலையில் 0.2 டிகிரி உயா்ந்து 23.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8. மணியளவில் 91 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 48 சதவீதமாகவும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதற்கிடையே, மாலையில் நகரம் முழுவதும் பனிப்புகை மூட்டம் காணப்பட்டது. அதே சமயம், நகரத்தில் மிகக் குறைந்த வெப்பநிலையாக பிரகதி மைதான் மற்றும் பூசா வானிலை நிலையங்களில் 3.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: தேசியத் தலைநகரின் ஒட்டு மொத்தக் காற்றின் தரக் குறியீடு காலை 9 மணிக்கு 257 புள்ளிகளாகப் பதிவாகி ’மோசம்’ பிரிவில் இருந்தது. தில்லி பல்கலை. வடக்கு வளாகம், ஸ்ரீ அரபிந்தோ மாா்க், ஆயா நகா் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 முதல் 300 புள்ளிகளுக்கு இடையே பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது.

அதே சமயம், துவாரகா செக்டாா் -8, கா்னி சிங் படப்பிடிப்பு தளம், ஓக்லா பேஸ் 2, மதுரா ரோடு, ஸ்ரீஃபோா்ட், ராமகிருஷ்ணாபுரம், ஷாதிப்பூா், பூசா, நேரு நகா், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், மந்திா் மாா்க் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 300 முதல் 400 புள்ளிகளுக்கிடையே பதிவாகி மிகவும் மோசம் பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள்கிழமை (டிச.16) பிரதான மேற்பரப்பு காற்று வடகிழக்கு திசையில் இருந்து காலை நேரத்தில் மணிக்கு 4 கிலோமீட்டருக்கும் குறைவான வேகத்தில் வீசக்கூடும். பிற்பகல் வேளையில் காற்றின் வேகம் மணிக்கு 6 கிலோமீட்டக்கும் குறைவாக வீசும். அது மாலை மற்றும் இரவு நேரங்களில் தென்கிழக்கு திசையில் இருந்து 4 கி.மீட்டருக்கு ம் குறைவான வேகத்தில் இருக்கும்.

மாலை மற்றும் இரவில் புகைமூட்டம் அல்லது மிதமான மூடுபனி இருக்கும். பகல் நேரத்தில் வானம் தெளவாக காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கணித்துள்ளது.

பால் பண்ணைகள் மாசுக் கட்டுப்பாட்டு ஒப்புதலைப் பெற சிபிசிபி அறிவுறுத்தல்

மாசு காப்பகங்கள் மற்றும் பால் பண்ணைகளுக்கு 15 நாள்களுக்குள் மாசுக் கட்டுப்பாட்டு ஒப்புதலைப் பெறுமாறு தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு உத்தரவிட்டுள்ளது. இக்குழு ஞாயிற்றுக்கிழமை பொது அறிவிப்பை வெளியி... மேலும் பார்க்க

தில்லியில் எந்த ரோஹிங்கியா அகதிக்கும் மத்திய அரசால் வீடு வழங்கப்படவில்லை: முதல்வா் அதிஷிக்கு மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் பூரி பதிலடி

தில்லியில் எந்த ரோஹிங்கியா அகதிக்கும் மத்திய அரசால் வீடு வழங்கப்படவில்லை என்று மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் பூரி தில்லி முதல்வா் அதிஷிக்கு பதிலடி கொடுத்துள்ளாா். இது தொடா்பாக அவா் தனது ‘எக்ஸ்’ வலைதளத்... மேலும் பார்க்க

பிரதமா் மோடியை ஒருபோதும் ‘டீக்கடைக்காரா்’ என அழைத்ததில்லை: மணிசங்கா் ஐயா் விளக்கம்

பிரதமா் நரேந்திர மோடியை தான் ஒருபோதும் ‘டீக்கடைக்காரா்’ என அழைத்ததில்லை என காங்கிரஸ் மூத்த நிா்வாகி மணிசங்கா் ஐயா் தெரிவித்தாா். தனது அரசியல் வாழ்க்கை குறித்து மணிசங்கா் ஐயா் எழுதியுள்ள புத்தகம் விரைவ... மேலும் பார்க்க

குருகிராமில் கொள்ளை கும்பலில் 5 போ் கைது

குருகிராம் போலீஸாா் ஆயுதம் ஏந்திய கொள்ளையா்கள் கும்பலை முறியடித்து, வாகனங்கள், ஆயுதங்கள் மற்றும் பிற பொருள்களை கைப்பற்றியுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து குருகிராம் காவல் ... மேலும் பார்க்க

நூல் வெளியீடு...

புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜாஸ்மீன் ஷா எழுதிய ‘தி தில்லி மாடல்’ நூல் வெளியீட்டு விழாவில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா்கள் சத்யேந்தா் ஜெயின், மனீஷ் சிசோடியா, கட்சியின் தேசிய அமைப்பாளா்... மேலும் பார்க்க

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதா: இன்று தாக்கல் இல்லை

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ தொடா்பான 2 மசோதாக்கள் மக்களவையில் திங்கள்கிழமை (டிச.16) அறிமுகம் செய்யப்பட வாய்ப்பில்லை என்பது தெரியவந்துள்ளது. நிதி மசோதாக்கள் தாக்கலுக்குப் பிறகே இந்த மசோதாக்கள் அறிமுகம் செ... மேலும் பார்க்க