செய்திகள் :

தலைநகரை சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்ற வேண்டும்: பேரவையில் காரசாரம்

post image

தமிழகத்தின் தலைநகரை மாற்ற வேண்டும் என பாஜக எம்எல்ஏ வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவின் தலைநகரை சென்னைக்கு மாற்ற வேண்டும் என அவைத் தலைவர் கோரிக்கை வைத்ததால் அவையில் கலகலப்பான சூழல் ஏற்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பேரவைக் கூட்டத் தொடரின்போது, சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுவதால், தமிழகத்தின் தலைநகரை சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்ற வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்தார்.

இதைக் கேட்ட அவைத் தலைவர் அப்பாவு, நாட்டின் தலைநகர் புது தில்லியை சென்னைக்கு மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் இதற்கு பதிலளிக்கும்போது, வாய்ப்பு வரும்போது கொண்டுவரப்படும் என்றதைக் கேட்ட எம்எல்ஏக்களின் சிரிப்பலையால் பேரவை அதிர்ந்தது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இருவர், தலைநகரை மாற்றுவது குறித்து வைத்த முன்மொழிதல்கள் அவையில் ருசிகர விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.

அதாவது, தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் இருப்பதால் திருச்சிக்கு தமிழகத்தின் தலைநகரை மாற்ற வேண்டும். திருச்சிக்கு பல வந்தேபாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்றார்.

இந்த சுவாரஸ்ய பேச்சுக்கு இடையே, பாரதிய ஜனதா எம்எல்ஏ பல கோரிக்கைளை அன்போடு வைத்துள்ளார். கோரிக்கைகள் அன்போடு பரிசீலிக்கப்படும் என்று பேரவையில் கூறினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

கைலாசா என்றொரு நாடு இல்லை! நித்தியானந்தா எங்கே?

கைலாசா நாட்டை உருவாக்குவதற்காக பழங்குடியினரை ஏமாற்றி அமேசான் வனப் பகுதியை வாங்கிய நித்தியானந்தா சீடர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அனைவரையும் இந்தியா, சீனா உள்ளிட்ட அவரவர் சொந்த நாடுகளுக்கு நாடு... மேலும் பார்க்க

உத்தரகோசமங்கை கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துளள் உலகின் முதன் முதலில் தோன்றிய சிவாலாயம் என்ற பெருமைப்பெற்ற உத்தரகோசமங்கை கோயிலில் இன்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.மங்களநாதர் சுவாமி - மங்களேஸ்வரி அம்ம... மேலும் பார்க்க

மாநிலங்களவை: வக்ஃப் மசோதாவுக்கு எதிராக அதிமுக வாக்களிப்பு! அன்புமணி, ஜி.கே. வாசன்?

மாநிலங்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக அதிமுக உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.மக்களவையில் வியாழக்கிழமை அதிகாலை வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் இ... மேலும் பார்க்க

பேரவையில் இன்று...

சட்டப்பேரவை வெள்ளிக்கிழமை (ஏப். 4) காலை கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். அதன்பின்பு, நீதி நிா்வாகம், சிறைகள் மற்றும் சீா்திருத்தப் பணிகள், சட்டத் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடக்கவுள்ளன.... மேலும் பார்க்க

நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500! செப்டம்பா் முதல் வழங்கப்படும்: பேரவையில் அமைச்சா் அறிவிப்பு

விவசாயிகளுக்கு வரும் செப்டம்பா் முதல் நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் அறிவித்தாா். வேளாண் துறை மானியக் கோரிக்கை மீதான விவ... மேலும் பார்க்க

3 மீன்பிடி துறைமுகங்கள், பசுமை துறைமுகங்களாக மேம்பாடு: அமைச்சா் ராதாகிருஷ்ணன்

தரங்கம்பாடி உள்பட 3 மீன்பிடித் துறைமுகங்கள் பசுமை துறைமுகங்களாக மேம்படுத்தப்படும் என்று அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் அறிவித்தாா். சட்டப்பேரவையில் அந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற வி... மேலும் பார்க்க