செய்திகள் :

தலைமைப் பண்பும் உள்ளுணர்வும்..! ஹார்திக் பாண்டியாவின் பேட்டி!

post image

இந்தியன் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 41-ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை அதன் சொந்த மண்ணில் நேற்றிரவு (ஏப்.23) வீழ்த்தியது.

முதலில் ஹைதராபாத் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 143 ரன்கள் சோ்க்க, மும்பை 15.4 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து வென்றது.

தொடர்ச்சியாக 4-ஆவது வெற்றியைப் பதிவு செய்த மும்பை, புள்ளிப் பட்டியலில் 3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

கடந்த சீசனில் மோசமாக விமர்சிக்கப்பட்ட பாண்டியாவின் கேப்டன்சி (தலைமைப் பண்பு) தற்போது பாராட்டப்பட்டு வருகிறது.

இந்த வெற்றி குறித்து மும்பை அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா கூறியதாவது:

கேப்டன்சி உள்ளுணர்வினால் ஆனது

வெற்றிக்குப் பின்புறமாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களது அணி வீரர்கள் தருணத்தை சரியான வழியில் எடுத்துச் செல்கிறார்கள்.

ரோஹித், தீபக் சஹார், போல்ட், சூர்யகுமார் என அனைவரும் ஃபார்முக்கு திரும்பியதால் இது ஒரு முழுமையான ஆதிக்கமாக இருக்கிறது. இது நிச்சயமாக ஒரு அற்புதமான வெற்றி.

சஹாருக்கு தொடர்ச்சியாக 4 ஓவர்கள் அளிக்கக் காரணம் அவர் சிறப்பாக பந்துவீசிக் கொண்டிருந்தார். சில நேரங்களில் கேப்டன்சி (தலைமைப் பண்பு) என்பது உள்ளுணர்வினால் ஆனது.

ஏற்கனவே திட்டமிட்டு இருந்தாலும் போட்டியின் சூழலுக்கு ஏற்பவே நான் எனது முடிவுகளை எடுப்பேன்.

இன்னும் சிறப்பாக செயல்பட முடியும்

விக்னேஷ் புதூரை களமிறக்கியதற்கு காரணம் விக்கெட்டின் தேடலில்தான். ஆனால், இதுவும் நடக்குமெனத் தெரியும். அவர் குறைவான போட்டிகளே விளையாடியுள்ளார். அதனால், இப்படி நடக்கும் என்பதை புரிந்துக்கொள்கிறேன்.

பேட்டிங், ஃபீல்டிங், பௌலிங் என அனைத்திலும் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். இது குறித்து நாங்கள் அதிகமாக கலந்துரையாடியுள்ளோம்.

ஒவ்வொரு போட்டியாக வெற்றிபெற நினைக்கிறோம். இந்த வெற்றியின் மூலமாக மிகவும் திருப்தியாக இருக்கிறோம் எனக் கூறினார்.

ஆடுகளத்தை தவறாக கணித்துவிட்டோம்: டேனியல் வெட்டோரி

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் ஆடுகளத்தை தவறாக கணித்துவிட்டதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி ஒப்புக்கொண்டுள்ளார்.ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்ற நேற்றையப் போட... மேலும் பார்க்க

ரோஹித் சர்மா மிகப் பெரிய பங்களிப்பை வழங்குவார்: டிரெண்ட் போல்ட்

ரோஹித் சர்மா உலகத் தரத்திலான வீரர் என மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் டிரெண்ட் போல்ட் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ... மேலும் பார்க்க

அதிக விக்கெட்டுகள்: மலிங்காவின் சாதனையை சமன்செய்த பும்ரா!

மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா முன்னாள் வீரரும் தற்போதைய பயிற்சியாளருமான லாசித் மலிங்காவின் சாதனையை சமன்செய்துள்ளார். இந்தியன் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 41-ஆவது ஆட... மேலும் பார்க்க

சின்னசாமி திடலில் ரஜத் படிதாருக்கு காத்திருக்கும் சவால்: ஜிதேஷ் சர்மா

ஜியோ ஹாட்ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் ஜிதேஷ் சர்மா ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதாருக்கு மிகப்பெரிய சவால் காத்திருப்பதாகக் கூறியுள்ளார். ஆர்சிபி அணி 8இல் 3 போட்டிகளில் தோல்வியுற்றுள்ளது. 10 புள்ளிக... மேலும் பார்க்க

என் பேட்டிங் வளர்ச்சிக்குக் காரணம் தினேஷ் கார்த்திக்: ஜிதேஷ் சர்மா

ஜியோ ஹாட்ஸ்டார் பேட்டியில் ஆர்சிபி வீரர் ஜிதேஷ் சர்மா தினேஷ் கார்த்திக் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார். ஆர்சிபி அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ஜிதேஷ் சர்மா சிறப்பாக விளையாடி வருகிறார். பேட்டி... மேலும் பார்க்க

5-ஆவது வெற்றியுடன் மும்பை முன்னேற்றம்

இந்தியன் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 41-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை அதன் சொந்த மண்ணில் புதன்கிழமை வீழ்த்தியது. முதலில் ஹைதராபாத் 20 ஓவா்கள... மேலும் பார்க்க