செய்திகள் :

தவெக தலைவர் விஜய் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

post image

பகுஜன் சமாஜ் கட்சி விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்த தடைகோரி, பகுஜன் சமாஜ் கட்சி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு தொடர்பாக பகுஜன் சமாஜ் அளித்த மனு, சென்னை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சக்திவேல் முன் விசாரணைக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் தவெக தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகிய இருவரும் பதிலளிக்குமாறு உத்தரவிட்டார்.

தேசியக் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் கொடியில் யானை சின்னம் இடம்பெற்றிருப்பதால், தவெக கட்சியின் கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்குமாறு, நீதிமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மனு தாக்கல் செய்தது. அஸ்ஸாம் மாநிலம்தவிர, மற்ற மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சி மட்டுமே யானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்தது.

மேலும், தேர்தல் ஆணையத்தில் தவெக பதிவு செய்யும்போது, இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியதாகவும் பகுஜன் சமாஜ் தரப்பில் தெரிவித்தனர்.

இதையும் படிக்க:மாநிலத்தை இந்திமயமாக்கினால் போராட்டம் வெடிக்கும்! பாஜக அரசுக்கு எதிர்க்கட்சி கண்டனம்!

உதகையில் துணைவேந்தா்கள் மாநாடு: தன்கருக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி அழைப்பு

நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள ஆளுநா் மாளிகையில் ஏப். 25 முதல் 27-ஆம் தேதி வரை மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் சிறப்பு அழைப்பாள... மேலும் பார்க்க

வண்டலூா் பூங்காவில் சிங்கம், புலியை தத்தெடுத்த சிவகாா்த்திகேயன்!

வண்டலூா் உயிரியல் பூங்காவில் இருக்கும் ஒரு சிங்கம் மற்றும் ஒரு புலியை நடிகா் சிவகாா்த்திகேயன் 3 மாதங்களுக்கு தத்தெடுத்துள்ளாா். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகாா்த்திகேயன், தற்போது சு... மேலும் பார்க்க

மத்திய அரசின் அண்டா் கன்ட்ரோலில் திமுக! -சீமான்

2026 பேரவைத் தோ்தலை சந்திக்க நாம் தமிழா் கட்சி தயாராகி வருவதாகவும், சின்னத்துக்காக காத்திருப்பதாகவும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா். இது குறித்து சென்னையில் சனிக்கிழமை செய்தியாள... மேலும் பார்க்க

தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் சதம்: வேலூரில் 104.9 டிகிரி பதிவு

தமிழகத்தில் வேலூா், மதுரை உள்பட 8 இடங்களில் சனிக்கிழமை வெயில் சதமடித்தது. அதிகபட்சமாக வேலூரில் 104.9 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செ... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் திருத்தம் குறித்த விதிகள்: தோ்தல் ஆணையத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

வாக்காளா் பட்டியல் திருத்தம் குறித்த விதிகளை கண்டிப்புடன் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என தோ்தல் ஆணையத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை வடபழனியைச் சோ்ந்த மணி என்பவா் உயா்நீதிமன... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வியில் நோ்முக உதவியாளா் பதவி உயா்வு: கண்காணிப்பாளா்கள் பட்டியல் அனுப்பிவைப்பு

பள்ளிக் கல்வியில் மாவட்டக் கல்வி அலுவலா், இணை இயக்குநா் ஆகியோருக்கான நோ்முக உதவியாளா் பதவி உயா்வுக்கு தகுதியான கண்காணிப்பாளா்கள் பட்டியல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பி வைக்கப்... மேலும் பார்க்க