செய்திகள் :

``தவெக-வின் வேகம் பத்தாது... திமுக மீதான விமர்சனங்களில் நான் பின்வாங்கவில்லை” - காளியம்மாள் பேட்டி

post image

நாம் தமிழர் கட்சியிலிருந்து கடந்த பிப்ரவரி மாதம் விலகிய காளியம்மாள், 'தி.மு.க பக்கம் செல்லப்போகிறார். இல்லை, இல்லை... தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போகிறார்' என பல செய்திகள் றெக்கைக் கட்டின. நாகப்பட்டிணம் ஏரியாக்களில் பலத்த எதிர்பார்ப்பெல்லாம் எழுந்தது.

ஆனால், எந்தப் பக்கமும் செல்லாமல், தானுண்டு தன் வேலையுண்டு என இருக்கிறார் காளியம்மாள். "அரசியலில் இருந்தே மொத்தமாக ஒதுங்கிவிட்டாரோ..." என கேள்விகள் முளைத்துள்ள நிலையில், அதுகுறித்து காளியம்மாளிடமே பேசினேன்.

``தமிழக வெற்றிக் கழகத்தில் நீங்கள் இணையவதற்கான பேச்சுவார்த்தையெல்லாம் முடிந்துவிட்டதாக சொல்கிறார்களே!”

விஜய்
விஜய்

``நான் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக பரவும் தகவல்கள் அனைத்தும் அவதூறுதான். நாம் தமிழர் கட்சியில் தொடர்வதில் எனக்கு ஏகப்பட்ட நெருடலும் வருத்தமும் ஏற்பட்டதால் அக்கட்சியிலிருந்து விலகிவிட்டேன். ஆனாலும் மீனவர், விவசாய பெருங்குடி மக்களின் உரிமை சார்ந்த ஆர்ப்பாட்டங்களில் தொடர்ந்து பங்கெடுத்துவருகிறேன். கடந்த காலங்களில் கடுமையான விமர்சனங்கனை நானே முன்வைத்திருப்பதால் `எடுத்தோம், கவிழ்த்தோம் என எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை. அதேசமயம் கட்சிகளில் இணைந்து மக்கள் அரசியலை தொடர்வதில் உறுதியாக இருக்கிறேன். எந்த கட்சியில் இணைகிறேன் என்பதை என்னை நம்பி நிற்கும் மீனவ, விவசாய பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பேன்”

``அந்த கட்சியில் இணைய இருப்பதால் தானே, மந்தமான நிலையில் த.வெ.க இருந்தாலும் நா.த.க-வை மட்டும் விமர்சிக்கிறீர்கள்!”

"அப்படியில்லை... உள்ளாட்சி பிரதிநிதிகளைப் பெறாமல், உட்கட்டமைப்பை வலிமைப்படுத்தாமல், மக்களைச் சந்திக்காமல் எந்தவொரு கட்சிக்கும் வெற்றி சாத்தியமில்லை. அது நாம் தமிழருக்கும் பொருந்தும், த.வெ.க-வுக்கும் பொருந்தும். தேர்தல் நெருங்கிவிட்ட சூழலிலும்கூட, த.வெ.க அமைதியாக இருப்பதும், மெல்ல மெல்ல நகர்வதும் அவர்களுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்துமா என்று தெரியவில்லை"

சீமான்

``நா.த.க-வையும் த.வெ.க-வையும் விமர்சிக்கிறீர்களே. ஒருவேளை தி.மு.க-வில் இணையப் போகிறீர்களா?”

``"ஈழ விடுதலை போராட்டத்தில் தி.மு.க எடுத்த தவறான நிலைப்பாடு, சாராய விற்பனை, மகளிர் உரிமை தொகையால் எந்தப் பயனும் இல்லை என்பது போன்ற என்னுடைய விமர்சனங்களிலிருந்து நான் இப்போதும் பின்வாங்கவில்லை. அதுமட்டுமல்ல... மீனவர், விவசாயிகள் போராட்டங்களில் இப்போதும் தி.மு.க அரசின் செயல்பாடுகள் குறித்து கூர்மையான விமர்சனங்களை முன்வைக்கத்தான் செய்கிறேன்.”

எடப்பாடி பழனிசாமி

``பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்திருக்கும் அ.தி.மு.க குறித்து..!”

``முதலில் அனைத்துக் கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து பேசிக் கொண்டிருக்க நான் ஒன்றும் அரசியல் விமர்சகர் கிடையாது. யார், யார் எந்த கூட்டணியில் இருக்கிறார்கள் என்பது தேர்தல் நெருக்கத்தில்தான் இறுதி வடிவம் பெறும். பார்ப்போம்!”

முழங்கிய 30 குண்டுகள், முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட அணுசக்தி விஞ்ஞானியின் உடல்!

இந்திய அணுசக்தி துறையின் மிக மூத்த அறிவியலாளரான எம்.ஆர். ஸ்ரீனிவாசன் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 20 - ம் தேதி விடியற்காலை ஊட்டியில் உயிரிழந்தார். 95 வயதில் காலமான எம்.ஆர். ஸ்ரீனிவ... மேலும் பார்க்க

வேலூர்: கனமழையில் சேதமடைந்து சாய்ந்த மின் கம்பம்; அச்சப்படும் பொதுமக்கள்.. கவனிப்பார்களா அதிகாரிகள்?

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம் பகுதியில் அமைந்திருக்கிறது மேலரசம்பட்டு கிராமம். வேலூர் மாவட்டத்தில் சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக மேலரசம்பட்டு பகுதியில் சாலையின் ஓரத்தில் இருக்கும் மின்கம்... மேலும் பார்க்க

ஆத்தூர்: பராமரிப்பின்றி பாழாகும் சிறுவர் பூங்கா... அச்சப்படும் மக்கள்! - கவனிப்பார்களா அதிகாரிகள்?

சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், காந்தி நகர் பகுதியில் சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. இப்பூங்கா பல ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் இங்கு நேரத்தை செலவிடு... மேலும் பார்க்க

நிதி ஆயோக்: "வீராவேசமாக பேசியவர் டெல்லிக்கு பறக்கிறாராம்..."- ஸ்டாலினைச் சாடும் எடப்பாடி பழனிசாமி

நிதி ஆயோக் கூட்டம் 2015-ம் ஆண்டு முதல் பிரதமர் தலைமையில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களை தவிர வேறு மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கவில்லை என்று குற்றம்... மேலும் பார்க்க

துபாயிலிருந்து தங்கம் இறக்குமதி செய்ய புதிய கட்டுப்பாடுகளை விதித்த மத்திய அரசு - ஏன் தெரியுமா?

துபாயில் இருந்து தங்கம் இறக்குமதி செய்வது சம்பந்தமாக புதிய விதிகளை விதித்துள்ளது மத்திய அரசு. அதன் படி, இந்தியா - ஐக்கிய அரபு அமீரக விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தின் (CEPA) கீழ், முகவர் நிறுவனங... மேலும் பார்க்க

யூடியூபர் முதல் கல்லூரி மாணவர் வரை.. பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 11 பேர் கைது - நடந்தது என்ன?

இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் நடந்து முடிந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு உளவுப் பார்த்ததாக இந்தியாவில் மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் விவரங்கள் வெளியாகி இருக்கிறத... மேலும் பார்க்க