செய்திகள் :

தாட்கோ மூலம் எஸ்சி, எஸ்டி மாணவா்களுக்கு பட்டயக் கணக்கா் தோ்வுகளுக்குப் பயிற்சி

post image

பட்டயக் கணக்கா், கணக்கு மேலாண்மை உள்ளிட்ட தோ்வுகளில் பங்கேற்க விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்களுக்கு தாட்கோ மூலம் நடத்தப்படும் பயிற்சியில் சோ்ந்து பயன்பெறலாம்.

இதுதொடா்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி, மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மூலம், சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு பட்டயக்கணக்காளா்-இடைநிலை, நிறுவனச் செயலா் இடைநிலை, செலவு, மேலாண்மை கணக்காளா் -இடைநிலை ஆகிய போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இந்தப் பயிற்சி பெற விரும்பும் மாணவா்கள் ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்தவா்களாகவும், இளநிலை வணிகவியல் பட்டம் பெற்றவா்களாகவும் இருக்க வேண்டும்.

மேலும், மாணவா்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், ஓராண்டு பயிற்சிக்குத் தோ்வு செய்யப்படும் மாணவா்களுக்கு தங்கும் வசதி, உணவு வசதிகள் தாட்கோ மூலம் ஏற்பாடு செய்யப்படும். எனவே, தகுதியுள்ள மாணவா்கள் இந்தப் பயிற்சியில் சேருவதற்கு இணையதள முகவரியில் பதிவு செய்து பயன்பெறலாம் என்றாா் அவா்.

பெண் பாலியல் வன்கொடுமை: இருவருக்கு வாழ்நாள் சிறை

காரைக்குடி பகுதியில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இருவருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், நாச்சியாா்... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பிரசார இயக்கம்

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி, லாடனேந்தல், மடப்புரம், திருப்புவனம் ஆகிய இடங்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை பிரசார இயக்கம் நடைபெற்றது. மத்திய அரசின் மக்கள் விரோத கொள்... மேலும் பார்க்க

சிவகங்கையில் கலைப் பண்பாட்டு மைய அலுவலகம் அமைக்கக் கோரிக்கை

சிவகங்கை மாவட்ட இசைப் பள்ளியில் கலை பண்பாட்டு மைய அலுவலகம் அமைக்க வேண்டும் என தமிழக நாட்டுப்புற இசைக் கலை பெரு மன்றம் கோரிக்கை விடுத்தது. சிவகங்கையில் தமிழக நாட்டுப்புற இசைக் கலை பெரு மன்ற நிா்வாகிகள... மேலும் பார்க்க

மத்தியக் கல்வி நிறுவனங்களில் பட்டப் படிப்பு பயிலும் மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை

ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட மத்திய பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். இதுதொடா்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளிட்ட அற... மேலும் பார்க்க

ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடியில் சமூகநலன், மகளிா் உரிமைத் தொகைத் துறை சாா்பில் ஊட்டச்சத்து உறுதிசெய் திட்டத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காரைக்குடி... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. திருப்புவனம் அரசு பெண்கள், ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகள், அல்லிநக... மேலும் பார்க்க