தாட்கோ மூலம் மாணவா்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி
நாமக்கல் மாவட்டத்தில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்த மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான தொழில்நுட்பப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தைச் சாா்ந்தவா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
அதனடிப்படையில், அவா்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சியாளா், பிராட்பேண்ட் டெக்னிஷியன் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
இதில் சோ்ந்து பயில 12-ஆம் வகுப்பு தோ்ச்சி, தொழிற்பயிற்சி (ஐடிஐ), பட்டயப் படிப்பு (டிப்ளமோ) மற்றும் ஏதேனும் பட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தை சாா்ந்தவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். பயிற்சி முடித்ததும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளமான மூலம் பதிவு செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.