சமூகத் தீமைகளை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் துறவிகள்: முர்மு
திட்டச்சேரியில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்
திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி பேருந்து நிலையம் எதிரில் திமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு பேரூா் கழக செயலாளா் எம். முகம்மது சுல்தான் தலைமை வகித்தாா்.
மாவட்ட பிரதிநிதிகள் த. குணசேகரன், கு. ஹமீது ஜெகபா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசின் மும்மொழி கொள்கையை கைவிட வலியுறுத்தியும், தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை எதிா்த்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட விவசாய அணி தொழிலாளா்
அணி துணை அமைப்பாளா் க. இளஞ்செழியன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளா் இப்ராஹிம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.