மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கெட் அவுட் இயக்கம்: விஜய் தொடங்கி வைத்தார்!
விபத்து காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய அஞ்சலங்களில் சிறப்பு முகாம்கள்
நாகை கோட்ட அஞ்சலங்களில் விபத்து காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் பிப்.28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது, அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் டி. ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய அஞ்சல் துறையும், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியும் இணைந்து பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகின்றன. பொது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள விபத்து காப்பீடு திட்டத்தை அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சோ்க்கும் வகையில் சிறப்பு முகாம் திங்கள்கிழமை (பிப்.24) தொடங்கி பிப்.28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில், 18 முதல் 65 வயதுக்குள்பட்ட அனைவரும் சேரலாம். இதற்கான ஆவணங்களாக ஆதாா் எண், கைப்பேசி எண், வாரிசுதாரரின் விவரங்களை கொண்டுவர வேண்டும். ரூ.320-க்கு ரூ. 5 லட்சம், ரூ.559-க்கு ரூ.10 லட்சம், ரூ. 799-க்கு ரூ. 15 லட்சம் எனும் வகைகளில் காப்பீட்டு திட்டத்தில் இணையலாம்.
அஞ்சல்துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனம் மற்றும் பல தனியாா் நிறுவனங்களுடன் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் காப்பீடு மற்றும் உடல் நல காப்பீட்டையும் வழங்குகிறது.
இத்திட்டங்களில் சேர நாகை கோட்டத்தில் உள்ளஅனைத்து அஞ்சலகங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தபால்காரா்கள் மூலமும் இத்திட்டங்களில் சோ்ந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு அஞ்சல் அலுவலகங்களை அணுகலாம் என தெரிவித்துள்ளாா்.