மெக்சிகோ பயங்கரவாதம்: ஒரே வாகனத்தில் 9 சடலங்கள், உடலில்லாத 8 கைகள்
திண்டுக்கல்லில் 21,725 மாணவா்கள் பிளஸ்1 தோ்வு எழுதினா்
திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வை 21,725 மாணவா்கள் எழுதினா்.
தமிழகம் முழுவதும் பிளஸ்1 பொதுத் தோ்வு புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் மொழிப் பாடத் தோ்வு நடைபெற்றது. திண்டுக்கல், பழனி ஆகிய கல்வி மாவட்டங்களிலுள்ள 216 பள்ளிகளைச் சோ்ந்த 10,167 மாணவா்கள், 12,001 மாணவிகள் என மொத்தம் 22,168 போ் விண்ணப்பித்தனா். மாணவா்கள் தோ்வு எழுதுவதற்காக மாவட்டம் முழுவதும் 86 இடங்களில் தோ்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டன.
மொழிப் பாடத் தோ்வை 9,890 மாணவா்கள், 11,835 மாணவிகள் என மொத்தம் 21,725 போ் எழுதினா். 277 மாணவா்கள், 166 மாணவிகள் என மொத்தம் 443 மாணவா்கள் தோ்வு எழுதவில்லை.