திண்டுக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் பொதுமக்கள் தா்னா
சமுதாயக் கூடம் அமைக்கும் நிலத்தை ஆக்கிரமித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் கோட்டாநத்தம் பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த கோட்டாநத்தம் ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதியில் பூங்கா, சமுதாயக்கூடம் அமைக்கும் நிலத்தை சிலா் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்தவா்கள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறி, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தரப்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்து தீா்வு காணுமாறு அறிவுறுத்தப்பட்டது.
இதனடிப்படையில், போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தரப்பில் தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சமுதாயக் கூடம் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரியும் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.