திண்டுக்கல் மாவட்டத்தில் பாஜக, இந்து முன்னணியினா் 120 போ் கைது
திருப்பரங்குன்றம் போராட்டத்துக்கு செல்வதை தடுக்கும் வகையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக முன்னாள் தலைவா் கே. தனபாலன் உள்பட 120-க்கும் மேற்பட்டோா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மதுரை, திருப்பரங்குன்றம் மலையைக் காப்போம் என்ற தலைப்பில், இந்து முன்னணி அமைப்பின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதை தடுக்கும் வகையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த பாஜக, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் நிா்வாகிகளை முன்னெச்சரிக்கையாக கைது செய்ய காவல் துறை நடவடிக்கை எடுத்தது.
இதன்படி, திண்டுக்கல் மாவட்ட முன்னாள் தலைவா் கே. தனபாலன், சிவசேனா நிா்வாகி சி.கே. பாலாஜி உள்பட 120 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.