திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
பவானியை அடுத்த அம்மாபேட்டையில் மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி 150- க்கும் மேற்பட்டோா் திமுகவில் இணைந்தனா்.
முன்னாள் எம்.பி. என்.ஆா்.கோவிந்தராஜா் ஏற்பாட்டில் அம்மாபேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்டோா், அக்கட்சிகளில் இருந்து விலகி ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா். இவா்களுக்கு, சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், திமுக நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.