செய்திகள் :

'திமுகவை அகற்றுவேன் என்று கூறியவர்களை காலமே விழுங்கியிருக்கிறது' - அமித் ஷாவை சாடிய நாஞ்சில் சம்பத்

post image

கிருஷ்ணகிரியில் நேற்று திராவிட இயக்கப் பேச்சாளரான நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் அமித் ஷாவின் சென்னை விசிட் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் பேசியதாவது...

"தமிழில் பேசத் தெரியவில்லை என்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று அமித் ஷா கூறியது நாடகத்தின் ஒத்திகை. தமிழ் மொழிக்கு எதிராக சிந்திக்கும் குரூரமான சிந்தனை உடையவர் இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

நாஞ்சில் சம்பத்
நாஞ்சில் சம்பத்

யாராவது உயிர் தரமாட்டார்களா என்று..!

சமஸ்கிருதத்தில் இருந்து தான் தமிழ் பிறந்தது என்று கூறி 8 கோடி தமிழ் மக்களின் நெஞ்சில் ஈட்டி எறிந்தவர் இந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா. இப்போது செத்து கிடக்கும் பாஜக-விற்கு தமிழ்நாட்டில் யாராவது உயிர் தரமாட்டார்களா என்ற நப்பாசையில் அமித் ஷா இப்படி பேசியிருக்கிறார்.

திமுகவை அகற்றுவேன் என்று கூறியவர்களை காலமே விழுங்கியிருக்கிறது. இதற்கு நிறைய வரலாற்றுச் சாட்சிகள் உண்டு. திமுக என்பது கட்சி கிடையாது. அது ஒரு இயக்கம். திமுக உங்களை மாதிரி கும்பல் அரசியல் நடத்தும் கட்சி அல்ல; அது கொள்கை அடிப்படையிலான கட்சி. இந்தக் கட்சியை அழிப்பதற்கு ராணுவத்தாலேயே முடியாது. உங்களால் எப்படி முடியும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

`முருகன் மாநாடு' BJP-க்கு எதிராக Stalin கையிலெடுக்கும் 'ஐயனார் அரசியல்!' | Elangovan EXPLAINS

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இது முழுமையாக இந்துக்கள் வாக்குகளை அறுவடை செய்து விடும் என நம்பிக்கையோடு லாபக் கணக்கு போடுகிறது பாஜக. அதே நேரத்தில் இந்த மாநாட்டில் த... மேலும் பார்க்க

Iran: அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல்; சமாதானத்துக்கு இறங்கி வந்த டிரம்ப்.. ஈரான் பதில் என்ன?

கடந்த 13-ம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் நடத்தியத் தாக்குதல் தற்போது கத்தார் வரை வந்து நிற்கிறது. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது என்ற குற்றச்சாட்டில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்துவந்தது. இஸ்... மேலும் பார்க்க

அமெரிக்கா: ரூ.19 ஆயிரம் கோடி விமானம்; நிலத்தை ஊடுருவும் குண்டு - ஈரானை தாக்கிய நவீன ஆயுதங்கள்!

ஈரானின் அணுசக்தி மையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல் உலகின் அரசியல், பொருளாதார சூழலில் புதிய சூறாவளியை உருவாக்கியிருக்கிறது. இந்த தாக்குதல் உலக நாடுகளால் கவனிக்கப்பட ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளத... மேலும் பார்க்க

"நீட் முழுக்க பணம்தான் விளையாடுகிறது; வினாத்தாள் முதல் ரிசல்ட் வரை எல்லாம் குளறுபடி" - ஸ்டாலின்

மருத்துவ படிப்புகளுக்கு மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்த நீட் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.பல மாணவர்கள் நீட் தேர்வால் தற... மேலும் பார்க்க