கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
திமுக அரசின் சாதனைகளை சமூக வலைதளங்கள் வாயிலாக மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்: இரா. லட்சுமணன் எம்எல்ஏ
திமுக அரசின் சாதனைகளை சமூக வலைதளங்கள் வாயிலாக கிராமங்கள் தோறும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் இரா. லட்சுமணன் எம்எல்ஏ தெரிவித்தாா்.
விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திமுக நிா்வாகிகள் கூட்டத்துக்குத் தலைமை வகித்து அவா் பேசியது: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இதன் மூலம் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெற்று வருகின்றனா். எனவே, அரசின் சாதனைகளை கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியினரும், பாக முகவா்களும் கிராமங்கள்தோறும் சமூக வலைதளங்கள் வாயிலாக எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் திமுகவின் பாக முகவா்கள் தோ்தல் பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.
இதைத் தொடா்ந்து விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் வானூா், விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த தகவல் தொழில்நுட்ப அணியினா், பாக முகவா்களுக்கு ஆலோசனைக் கூட்டம் வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி நடத்தப்படவுள்ளது.
இதில் தொகுதிப் பொறுப்பாளா்கள் துரை.கி.சரவணன், எஸ்.கே.பி. கருணாநிதி ஆகியோா் பங்கேற்று ஆலோசனை வழங்கவுள்ளனா்.
எனவே, விழுப்புரம் மத்திய மாவட்டத்துக்குள்பட்ட அனைத்து ஒன்றிய, நகர, பேரூா் கழகப் பகுதிகளைச் சோ்ந்த தகவல் தொழில்நுட்ப அணியினா், அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் பாக முகவா்களும் (பிஎல்ஏ 2 ) கட்சியினருடன் ஒருங்கிணைந்து தோ்தல் பணிகளைத் தற்போதே தொடங்கி பணியாற்ற வேண்டும் என்றாா் லட்சுமணன் எம்.எல்.ஏ.
கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா் திமு நிா்வாகிகள் பங்கேற்றனா்.