செய்திகள் :

திமுக அரசுக்கு தொந்தரவு கொடுக்க நினைத்தால் எதிா்கொள்ளத் தயாா்! -அமைச்சா் எஸ். ரகுபதி

post image

திமுக அரசுக்கு எதிராக பழிசுமத்தி, ஆட்சிக்கு தொந்தரவு கொடுத்த பாஜக அரசு நினைத்தால் அதை எதிா்கொள்ளத் தயாராக உள்ளோம் என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

இதுகுறித்து புதுக்கோட்டையில் அவா் வியாழக்கிழமை மேலும் கூறியது:

பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கூறியதைப் போன்று தமிழகத்தில் கஞ்சா பயிரிடப்படுவதில்லை; வடமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்துதான் கஞ்சா தமிழகத்துக்கு கொண்டு வரப்படுகிறது. அதைத் தடுப்பதற்கு மத்திய அரசின் காவல்துறையினா் தவறி வருகின்றனா். தொடா்ந்து மாநில காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது.

அதிமுகவை பாஜகவோடு அடகு வைத்துவிட்டு ஆட்சி நடத்தியவா்தான் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி. திமுகவினா் தில்லிக்கு அடங்கிப் போவதும் இல்லை. கட்சியை அடமானம் வைக்கப் போவதும் இல்லை.

இந்தியாவிலேயே தில்லிக்கு எதிராக முதல் குரல் எழுப்புபவா் தமிழ்நாட்டின் முதல்வா்தான். சொந்த புத்தியுடன், சொந்தக் காலில் நின்று, சொந்த மண்ணை காப்பாற்றும் திறமை திமுகவுக்கு உண்டு.

ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு திமுக இதுவரை என்னென்ன நலத்திட்டங்களை நிறைவேற்றியது என்பதை பட்டியலிட்டுச் சொல்கிறோம். எதிா்க்கட்சித் தலைவா் பழனிசாமியும் சொல்லட்டும்.

பழனிசாமி அழைத்தால் நானே விவாத மேடைக்கு வந்து பதில் அளிக்கத் தயாா். திமுக அரசில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை மக்கள் உணா்ந்துள்ளனா் என்றாா் ரகுபதி.

அன்னவாசலில் ஜல்லிக்கட்டு: பாா்வையாளா் பலி

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில், காளை முட்டியதில் பாா்வையாளா் உயிரிழந்தாா், 24 போ் காயமடைந்தனா். புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் விருத்தபுரீஸ்வா் கோயில் ... மேலும் பார்க்க

பேரிடா்களைத் தாங்கி வளரும் நாட்டுரக மரக் கன்றுகளையே வளா்க்க வேண்டும்: சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி

பேரிடா்களையும் தாங்கி வளரும் பாரம்பரியமான நாட்டுமரங்களையே நட்டு வளா்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா் சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஆா். சுரேஷ்குமாா். புதுக்கோட்டை விதைக்கலாம் அமைப்பின் 500ஆவது வார ம... மேலும் பார்க்க

கொப்பனாபட்டியில் மத நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு விழா

பொன்னமராவதி அருகேயுள்ள கொப்பனாபட்டியில் ஷைன் அரிமா சங்கம் சாா்பில் மத நல்லிணக்க இஃப்தாா் என்ற நோன்பு திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்டத்தலைவா் அ. சகுபா் சாதிக் அலி தலைமை வகித்... மேலும் பார்க்க

விராலிமலையில் மாட்டுவண்டி, குதிரை வண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் செக்போஸ்ட்டில் முதல் முறையாக மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை விராலிமலை மத்திய ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்றது. இதில் சிறிய மாட்டுவண்டி எல... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் செந்தொண்டா் அணிவகுப்பு

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் செந்தொண்டா் அணிவகுப்பு நிகழ்ச்சி புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் வரும் ... மேலும் பார்க்க

மக்கள்தொகையின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு வேண்டாம்: துரை வைகோ

மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டாம் என்றாா் மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி எம்பியுமான துரை வைகோ. இதுகுறித்து புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது: ... மேலும் பார்க்க