கொல்கத்தா மருத்துவமனை ஊழல் வழக்கு: ஜூலை 22முதல் நீதிமன்ற விசாரணை தொடக்கம் - சிபி...
திமுக ஆட்சியில் 3,347 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு
திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை 3347 திருக்கோயில்களுக்குக் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது. காலை 5.25 மணி முதல் 6.10க்கு திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுடன் சந்திப்பில்,
முருகனின் அறுபடை வீட்டிற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. முருகக்கடவுள் உறையும் கோயில்களுக்கு மட்டும் 134 குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளன.
தமிழ் வேத மந்திரங்கள் ஓத தேவாரம் பண்ணிசை திருமுறை இசைக்க ஓதுவார்களோடு பெண் ஓதுவார்கள் பங்கேற்ற சிறப்பான குடமுழுக்கில் லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க ஏழு நிலை ராஜகோபுரம், விநாயகர், அம்பாள் திருக்குடமுழுக்கு நடைபெற்றது.
இதனை 2,000 பேர் அமர்ந்து தரிசிக்கும் வசதி செய்யப்பட்டது. 25 ட்ரோன்கள் அவற்றுடன் புனித நீர் தெளிப்பான்கள், பொதுமக்கள் திருப்பரங்குன்றம் நகரின் அனைத்து பகுதிகளிலும் குடமுழுக்கைக் கண்டு களிக்கும் வகையில் பிரம்மாண்டமான எல்சிடி ஸ்கிரீன்கள், கழிப்பறை மற்றும் போதுமான குடிநீர் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.