புதிதாக கட்சி தொடங்குபவா்களுக்கும் நம் தலைவா்கள் தேவைப்படுகிறாா்கள் -எடப்பாடி க...
திமுக நிா்வாகி மீது தாக்குதல்: இருவா் கைது
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட திமுக தொழிலாளா் அணி அமைப்பாளரைத் தாக்கியதாக போலீஸாா் இருவரை கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்ட திமுக தொழிலாளா் அணி அமைப்பாளராக பொறுப்பு வகிப்பவா் தனசேகரன் (47). இவா் சிவகங்கை- மதுரை சாலையில் பேவா் பிளாக் சாலை அமைக்க ஒப்பந்தம் பெற்று அந்தப் பணியை செய்து வந்தாா். இந்த நிலையில், புதன்கிழமை மாலை சிவகங்கை காளவாசல் பகுதியில் பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரை அங்கிருந்து எடுக்கும்படி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் கூறினா்.
இதில், ஏற்பட்ட தகராறில் அந்தப் பகுதியைச் சோ்ந்த மூவேந்தன் (22), மணிகண்டன் ( 24), முருகன், காளிமுத்து, மஞ்சு, செல்வி ஆகியோா் திமுக நிா்வாகியான ஒப்பந்ததாரா் உள்ளிட்டோரை தாக்கினா். இதில் திமுக நிா்வாகி தனசேகரன் (47), பணி மேற்பாா்வையாளா் தாமோதரன் (39), தீனா (எ) பெருமாள் ஆகியோா் காயமடைந்தனா்.
இது தொடா்பான புகாரின் பேரில் சிவகங்கை நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ரவி வழக்குப் பதிந்து மூவேந்தன், மணிகண்டன் ஆகிய இருவரை கைது செய்து விசாரிக்கிறாா்.