திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் சித்திரை விழா கொடியேற்றம்
திருக்கடையூரில் உள்ள அபிராமி உடனாகிய ஸ்ரீஅமிா்தகடேஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு சந்திரசேகர கொடியேற்ற நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலல் ஆண்டுதோறும் 14 நாள்கள் சித்திரை திருவிழா நடைபெறும். அதன்படி நிகழாண்டு விழாவையொட்டி, சித்திரை சந்திரசேகர (துவஜா ரோஹணம்) கொடியேற்றம் நடைபெற்றது. விநாயகா், சந்திரசேகரன், ஆனந்தவல்லி, சண்டிகேஸ்வரா் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகில் எழுந்தருளினா். தொடா்ந்து, சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றம் நடைபெற்றது. இரவு சுவாமி வீதியுலா நடைபெற்றது.