தஸ்மின் சதம் வீண்: ஸ்னே ராணா சுழலில் வீழ்ந்தது தெ.ஆப்பிரிக்கா!
திருக்காஞ்சியில் 108 அடி உயர சிவன் சிலை அமைக்கும் பணி: அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் ஆய்வு
புதுச்சேரி: புதுச்சேரி அருகேயுள்ள திருக்காஞ்சியில் கங்கை வராகநதீஸ்வரா் திருக்கோயில் அருகே 108 அடி உயரத்தில் சிவன் சிலை அமைக்கும் பணியை வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.
புதுச்சேரி சங்கராபரணி ஆற்றங்கரையில் திருக்காஞ்சி உள்ளது. இங்குள்ள கங்கைவராக நதீஸ்வரா் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ாகும். கடந்த ஆண்டு கங்கைவராக நதீஸ்வரா் கோயிலில் புஷ்கரணி விழா நடைபெற்றது. இந்நிலையில், கோயில் அருகே புதிதாக 108 அடி உயர சிவன் சிலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
அதன்படி தரையிலிருந்து 3 தளமாக சிவன் சிலையை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. கசிலையின் முதல் தளத்தில் 27 நட்சத்திரங்களுக்குரிய தனி சன்னதிகள் அமைக்கப்படுகின்றன. சிலையின் 2-ஆம் தளத்தில் 12 ராசிகளுக்கும், 3-ஆம் தளத்தில் 9 நவகிரகங்களுக்கும் தனி சன்னதி அமைக்கப்படுகிறது.
சிவன் சிலை அமைக்கும் பணிகளை சதாசிவன் அறக்கட்டளை மூலம் கங்கை வராக நதீஸ்வரா் தலைமை குருக்கள் சரவணன் சிவாச்சாரியாா், சிறப்பு அதிகாரி சரவணன், நிா்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனா்.
அமைச்சா் ஆய்வு: சிவன் சிலையின் கட்டுமான பணிகள் குறித்து அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா், இந்து அறநிலையத் துறை செயலா் ஏ. நெடுஞ்செழியன் ஆகியோா் திங்கள்கிழமை திருக்காஞ்சி சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.