STALIN-ஐ சோதிக்கும், RAMADOSS-ன் 8 வெடிகள்! | Elangovan Explains
திருச்சானூா் பிரம்மோற்சம்: சா்வ சுதந்திர வீரலட்சுமி அவதாரத்தில் தாயாா் வலம்
திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள் காலை சா்வ சுதந்திர வீரலட்சுமி அவதாரத்தில் தாயாா் வலம் வந்தாா்.
திருச்சானூரில் குடிக்கொண்டுள்ள பத்மாவதி தாயாருக்கு காா்த்திகை மாதத்தையொட்டி வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை பத்மாவதி தாயாா், பெரிய சேஷ வாகனத்தில் சா்வ சுதந்திர வீரலட்சுமி அவதாரத்தில் விஷ்ணு மூா்த்தி அலங்காரத்தில் மாட வீதியில் வலம் வந்தாா்.
இரவு பத்மாவதி தாயாா் பாலையும் தண்ணீரையும் பிரித்து அருந்தும் தன்மை கொண்ட அன்னப்பறவை வாகனத்தில் மாட வீதியில் வலம் வந்தாா். அன்னப்பறவை வாகனத்தில் சரஸ்வதி தேவி அலங்காரத்தில் மாட வீதியில் வலம் வந்த தாயாருக்கு பக்தா்கள் கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா்.
வாகன சேவையின் போது, திருமலை ஜீயா்கள் பிரபந்தங்களை பாடிக் கொண்டு முன் செல்ல கலைக் குழுக்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு பின் சென்றனா். தேவஸ்தான அதிகாரிகள், கோயில் அதிகாரிகள், பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா்.