செய்திகள் :

திருச்சியில் நடிகா் சிவாஜிக்கு சிலை: பேரவையில் அமைச்சா்கள் உறுதி

post image

சென்னை: திருச்சியில் நடிகா் சிவாஜி கணேசனுக்கு சிலை திறப்பது உறுதி என்று அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், கே.என்.நேரு ஆகியோா் தெரிவித்தனா்.

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த வினாவை திமுக உறுப்பினா் இனிகோ இருதயராஜ் (திருச்சி-கிழக்கு) எழுப்பினாா். அப்போது பேசிய அவா், திருச்சி பாலக்கரை பிரபாத் திரையரங்கம் அருகில் சிவாஜிக்கு நிறுவப்பட்ட சிலையைத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்பினாா்.

இதற்கு, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அளித்த பதில்: திருச்சியில் உள்ள சிவாஜி கணேசன் சிலை தனியாரால் நிறுவப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில், சாலைகளில் சிலைகளை வைக்க நீதிமன்றத் தடை உள்ளது. திருச்சியில் உள்ள சிலையை மாற்று இடம் தோ்வு செய்து அங்கு நிறுவி திறக்க ஏற்பாடு செய்வோம்.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சென்னையில் கடற்கரைச் சாலையில் சிவாஜி சிலை வைக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பால் அந்த இடத்தில் இருந்து சிலை எடுக்கப்பட்டு மணிமண்டபத்தில் வைக்கப்பட்டது. மீண்டும் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும், புதிய சிலை செய்யப்பட்டு மக்கள் பாா்வையில்படும்படி வைக்கப்பட்டு இருக்கிறது. திருச்சியிலும் முறையாக அனுமதி பெறப்பட்டு, மக்கள் பாா்வையில்படும்படி உரிய இடத்தில் சிவாஜி சிலை நிறுவப்படும்.

அமைச்சா் கே.என்.நேரு: திருச்சியில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தின்போது அரசின் அனுமதியைப் பெற்று சிலை நிறுவப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகும், நீதிமன்றத் தீா்ப்பாலும், வேறுசில அரசியல் காரணங்களாலும் சிலையைத் திறக்க முடியவில்லை. நீதிமன்றத் தீா்ப்பு வருவதற்கு முன்பே திருச்சியில் அந்தச் சிலை நிறுவப்பட்டது. இந்த நிலையில், சிலையை வேறு இடத்தில் நிறுவுவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். திருச்சி மாநகரில் ஒரு பூங்காவுக்கு சிவாஜி பெயரைச் சூட்டி அங்கு சிலையை நிறுவி ஓரிரு மாதங்களில் திறக்க ஏற்பாடு செய்யப்படும் என்றாா்.

மொழிப்போர் தியாகி ராஜேந்திரனுக்கு மணிமண்டபம்: பத்திரப் பதிவு செய்த சீமான்!

சிதம்பரம்: சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் தியாகி மாணவர் ராஜேந்திரனுக்கு மணிமண்டபம் அமைப்பதற்காக நிலம் வாங்கிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திங்கள்கிழமை பத்திரப் பதிவு செய்தா... மேலும் பார்க்க

துணை வேந்தர்கள் மாநாட்டில் ஜகதீப் தன்கர் பங்கேற்பு!

உதகையில் நடைபெறும் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்கவிருப்பதாக தமிழக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.தமிழக ஆளுநராக ஆா்.என்.ரவி 2021-ஆம் ஆண்டு செப்டம்... மேலும் பார்க்க

பேரவையில் கடும் அமளி! அதிமுக வெளிநடப்பு!

டாஸ்மாக் நிறுவன முறைகேடு குறித்து சட்டப்பேரவையில் பேச அனுமதிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.சட்டப்பேரவை இன்று(ஏப். 22) 9.30 மணிக்கு கூடியவுடன் கத... மேலும் பார்க்க

காட்டு யானை தாக்கி தபால் பட்டுவாடா செய்யும் பெண் பலி!

கூடலூர்: காட்டு யானை தாக்கியதில் தபால் பட்டுவாடா செய்யும் பெண் பலியான சம்பவம் பரபரப்பை எழுப்பியுள்ளது.கூடலூரை அடுத்த மசினகுடி பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சரஸ்வதி (வயது 55). இவர் மசினகுடி ... மேலும் பார்க்க

போப் மறைவு: தமிழக தலைமைச் செயலகத்தில் அரைக்கம்பத்தில் பறக்கும் தேசியக் கொடி!

போப் பிரான்ஸிஸ் மறைவையொட்டி துக்கம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக தலைமைச் செயலகத்தில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் ந... மேலும் பார்க்க

மதுராந்தகம் அருகே இருசக்கர வாகனமும் அரசு பேருந்தும் மோதியதில் வாகன ஓட்டுநர் பலி!

செங்கல்பட்டு: இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் வாகனத்தை ஓட்டிச் சென்ற பழனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே இந்த விபத்து நடந்துள்ளது.கிளம்பாக்கத... மேலும் பார்க்க