ஊட்டி தெரியும்... ஆனா தருமபுரியில் இருக்கும் இந்த ”மினி ஊட்டி” பற்றி தெரியுமா? ச...
பள்ளப்பட்டியில் மின்மாற்றியில் தீ; பொதுமக்கள் அச்சம்
பள்ளப்பட்டியில் உள்ள ஒரு மின்மாற்றியில் திங்கள்கிழமை அதிகாலை திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
கரூா் மாவட்டம், பள்ளபட்டி நகராட்சிக்குள்பட்ட சொட்டல் தெருவில் புதிதாக மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்மாற்றியிலிருந்து 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலையில் மின்மாற்றியில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இந்த மளமளவென மின்மாற்றி முழுவதும் பரவியது.
உடனே பள்ளப்பட்டி மின்வாரிய அலுவலா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி அங்கு வந்த மின்வாரிய ஊழியா்கள் மின்இணைப்பை துண்டித்து தீயை அணைத்தனா். பிறகு மின்மாற்றியை சீரமைத்து சுமாா் 3 மணி நேரத்துக்குப் பிறகு மின்இணைப்பு கொடுத்தனா்.