செய்திகள் :

திருச்சியில் ரூ.290 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூலகம்: அரசாணை வெளியீடு

post image

திருச்சியில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பெயரிலான நூலகத்தை ரூ.290 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கான நிர்வாக அனுமதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியதை அடுத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூன் 27 இல் சட்டப் பேரவையில் விதி எண் 110 இன் கீழ் காவிரிக் கரையில் அமைந்த மாநகரமான திருச்சிராப்பள்ளி மாநகரில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதனை செயல்படுத்தும் விதமாக கலைஞர் பெயரிலான நூலகத்தை ரூ.290 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கான நிர்வாக அனுமதியை முதல்வர் அரசாணை மூலம் வழங்கியுள்ளார்.

இதையும் படிக்க |அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

திருச்சி கிழக்கு வட்டம், செங்குளம் மற்றும் கோ.அபிஷேகபுரம் கிராம நகரளவையில் 1,97,337 சதுரடி அளவில் நூலகக் கட்டடம், மின் பணிகள் ரூ.235 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டுவதற்கு பொதுப்பணித் துறையிடம் இருந்து விரிவான திட்ட மதிப்பீடு மற்றும் வரைப்படம் பெறப்பட்டுள்ளது.

மேலும் நூலகத்திற்கு தேவையான நூல்கள் மற்றும் மின்நூல்கள் ரூ.50 கோடி மதிப்பிலும் மற்றும் தொழில்நுட்ப சாதனங்கள் ரூ.5 கோடி என மொத்தம் ரூ.290 கோடி மதிப்பில் அமைப்பதற்கு தமிழ்நாடு நிதிக் குறியீடு விதி 99 இன்படி முன்பணம் பெற்று செலவினம் மேற்கொள்ள நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வழங்குமாறு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், திருச்சி மாவட்ட மக்களின் சார்பாகவும், டெல்டா மாவட்ட இளைஞர்கள், வாசகர்கள், எழுத்தாளர்களின் சார்பாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் கனமழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்), ஆழ்ந்த ... மேலும் பார்க்க

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்ற புயல் சின்னம்!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்), ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

பிச்சைக் கொடுத்தால் வழக்கு!

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் வருகின்ற 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் பிச்சைக்காரர்களுக்கு பிச்சைக் கொடுப்பவர்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என அம்மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது... மேலும் பார்க்க

வீட்டிற்குள் ஏற்பட்ட தீயினால் 2 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி!

ஜம்மு காஷ்மீர்: கத்துவா மாவட்டத்தின் ஷிவ் நகர் பகுதியில் 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியாகினர். மேலும், 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஷிவ்நகர் பகுதியிலுள்ள ஒரு வாடகை வீட்டில் 10... மேலும் பார்க்க

ராணுவ சோதனை: ஆயுதங்கள், போதைப்பொருள் பறிமுதல்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தில் மாநிலக் காவல்துறையோடு இணைந்து இந்திய ராணுவம் நடத்திய சோதனையில் துப்பாக்கிகள், அதன் தோட்டாக்கள் மற்றும் போதைப்பொருள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கிடைக... மேலும் பார்க்க

குரூப் 2, 2ஏ: சான்றிதழ்களை பதிவேற்ற இன்றே கடைசிநாள்!

குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுக்கான தேர்வு மையம் மற்றும் சான்றிதழை பதிவேற்றம் செய்ய இன்று(டிச. 18) கடைசி நாளாகும்.துணை வணிகவரி அதிகாரி, தொழிலாளா் நலத் துறை உதவி ஆய்வாளா், இளநிலை வேலைவாய்ப்பு அலு... மேலும் பார்க்க