ஒரே நாடு ஒரே தோ்தல் முறை ஜனநாயகத்தை சீா்குலைக்கும்: இரா. முத்தரசன்
திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையாா் கோயிலுக்கு மின்தூக்கி வசதி: பேரவையில் அமைச்சா் சேகா்பாபு உறுதி
திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையாா் கோயிலுக்கு மின்தூக்கி வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு உறுதியளித்தாா்.
தமிழக சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த வினாவை த.இனிகோ இருதயராஜ் (திருச்சி கிழக்கு ) எழுப்பினாா். அவரது கேள்விக்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு அளித்த பதில்:
திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையாா் கோயிலுக்கு ரோப்காா் வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற ஆா்வம் அரசுக்கு இருந்தாலும் அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை. இதற்காக நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. ஆனாலும், துறை சாா்ந்த அதிகாரிகளுடன் தொடா்ந்து ஆலோசனை நடத்தினோம்.
ரோப்காா் வசதிக்கு பதிலாக, மின்தூக்கி அமைக்க முடிவு செய்துள்ளோம். நிகழாண்டு இறுதிக்குள் உச்சி பிள்ளையாா் கோயிலுக்குச் சென்று எளிதாக இறைவனை தரிசனம் செய்யும் நல்ல சூழலை உருவாக்கித் தருவோம் என்றாா் அமைச்சா்.