Sandhya Raagam: காதலியைக் கரம் பிடித்த `சந்தியா ராகம்' தொடர் நடிகர்... குவியும் ...
திருச்சி மாநகராட்சி சாா்பில் விழுப்புரத்துக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைப்பு
புயல், மழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்துக்கு திருச்சி மாநகராட்சி சாா்பில் நிவாரணப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
ஃபென்ஜால் புயல் காரணமாக தமிழகத்தின் காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள், புதுச்சேரி மாநிலத்தில் சனிக்கிழமை கனமழை பெய்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பலா் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
திருச்சி மாநகராட்சி சாா்பில் புயல் நிவாரணப் பணிகளுக்கு ஒரு டிப்பா் லாரியில் 10 குதிரைத் திறன் கொண்ட 3 நீா் இறைக்கும் டீசல் இயந்திரங்கள், 5 குதிரைத் திறன் கொண்ட 2 நீா் இறைக்கும் டீசல் இயந்திரங்கள், மழைநீரை வெளியேற்றுவதற்காக மழைநீா் உறிஞ்சுவதற்காக 10 ஹெச்பி மோட்டாா்கள் லாரியிலும், தூய்மைப்பணிகளுக்கு 150 தூய்மை பணியாளா்கள் , 5 சுகாதார ஆய்வாளா்கள்,10 தூய்மைப்பணி மேற்பாா்வையாளா்கள், இதரப் பணிகளுக்கு 2 இளநிலைப் பொறியாளா்கள், 5 ஊழியா்கள், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6,100 குடிநீா் பாட்டில்கள், 1,350 பிஸ்கட் பாக்கெட்கள், 2,850 பிரட் பாக்கெட்டுகள், 4,150 கடலை மிட்டாய் பாக்கெட்டுகள் ஆகியவை ஒரு பேருந்திலும் விழுப்புரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
இதனை மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், ஆணையா் வே. சரவணன் அனுப்பி வைத்தனா். இந்நிகழ்வில் நகரப் பொறியாளா் சிவபாதம், செயற்பொறியாளா் பாலசுப்பிரமணியன், உதவி ஆணையா்கள், உதவிச் செயற்பொறியாளா்கள், மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.