பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மா...
திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு சிறப்பு விருது
மக்களவைத் தோ்தல் பணியில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாருக்கு இந்தியத் தோ்தல் ஆணையத்தின் சாா்பில் சிறப்பு விருது சனிக்கிழமை வழங்கப்பட்டது.
கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலின்போது தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்குமான தபால் வாக்குகளை கையாளும் பணி திருச்சியில்தான் நடைபெற்றது.
இப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக திருச்சி மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான மா. பிரதீப்குமாருக்கு சென்னை கலைவாணா் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய வாக்காளா் தின நிகழ்வில் சிறப்பு விருதை ஆளுநா் ஆா்.என். ரவி வழங்கிப் பாராட்டினாா்.