செய்திகள் :

திருச்சி: ரூ.3 கோடி மதிப்புள்ள 3 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்; தொடரும் கடத்தல் சம்பவங்கள்

post image

சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை விமான நிலையத்தில் வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்படி, சோதனை செய்த பொழுது சந்தேகத்திற்கிடமான வகையிலிருந்த ஒரு பயணியைத் தனியாக அழைத்து சோதனை செய்ததில், அவர் உடைமையில் ஹைட்ரோபோனிக் வகை கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளது.

அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 3 கிலோ எடையுள்ள பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.3 கோடி எனக் கூறப்படுகிறது.

கஞ்சாவைக் கடத்தி வந்த நபரைக் கைது செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

kanja
kanja

திருச்சி விமான நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அதே போல, கடந்த ஏப்ரல் மாதம் 10 கிலோ ஹைட்ரோபோனிக் வகை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று மீண்டும் 3 கிலோ ஹைட்ரோபோனிக் வகை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இப்படி திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து விமானங்களில் ஹைட்ரோபோனிக் வகை கஞ்சா கடத்தி வரப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

`திருமணத்திற்கு மறுப்பு' - காதலி வீட்டு முன் தூக்கிட்ட கேரள இளைஞர்; விஷம் குடித்த பெண்

கேரள மாநிலம் கொல்லம் பாருப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஜெயின் மகன் ஜிதின். ஜிதினின் தாத்தாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததைத் தொடர்ந்து சிகிச்சைக்காக கொல்லத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத... மேலும் பார்க்க

கிராமத்தையே மிரட்டிய போதை கும்பல்; புகாரளித்தும் கண்டுகொள்ளாத போலீஸ் - இளைஞன் கொலையில் பகீர் பின்னணி

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகிலுள்ள மேட்டுவேட்டாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரின் நண்பர்கள் சிலர் கடந்த 19-ம் தேதி தங்களின் கிராமத்து சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்ப... மேலும் பார்க்க

நள்ளிரவில் டாஸ்மாக் கடைக்கு தீ; ரூ.30 லட்சம் மதிப்பில் சரக்குகள் எரிந்து சேதம்.. மானாமதுரை பரபரப்பு!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையிலுள்ள டாஸ்மாக் கடை நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தீ அணைக்கும் பணிமானாமதுரை வைகை ஆற்றை ஒட்டி பல ஆண்டுகளாக டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிற... மேலும் பார்க்க

TASMAC: "கூடுதல் பணம் கேட்டு அதிகாரிகள் டார்ச்சர்" - வீடியோ வெளியிட்டு தற்கொலைக்கு முயன்ற ஊழியர்

திருச்சி, தென்னூர் உழவர் சந்தை அருகே உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வருபவர் பாலகிருஷ்ணன். இவர், நேற்று முன்தினம் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்நிலையில், விஷம் அருந்திய ந... மேலும் பார்க்க

கரூர்: ரூ. 12 லட்சம் செக் மோசடி வழக்கில் அ.தி.மு.க நிர்வாகி கைது... ஜாமீன்! - நடந்தது என்ன?

அ.தி.மு.க கரூர் மாவட்ட கலை இலக்கிய பிரிவு இணைச்செயலாளராக சுரேகா கே பாலச்சந்தர் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இவர், கடந்த 2012 - ம் ஆண்டு தனது குடும்பத் தேவைக்காக, தனது நெருங்கிய உறவினர் அசோக்கும... மேலும் பார்க்க

பிறழ் சாட்சியாக மாறிய காதல் தம்பதி; கடத்தல் வழக்கில் யுவராஜ் விடுதலை! - விவரம் என்ன?

ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்தவர் பாலாஜி. திருவாரூர் மாவட்டம், கொத்தங்குடியைச் சேர்ந்தவர் ஹேமலதா. இவர்கள் இருவரும் கடந்த 2013-இல் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இருவரின் வீட்டில் இவர்களின்... மேலும் பார்க்க